புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ராஜு விட்டுக்கொடுத்து வீணா போகலை.. கடுமையான போராளி நீங்க

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் கடந்த வாரம் முழுவதும் டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்றது. இதில் இறுதிச்சுற்றில் சிபி மற்றும் அமீர் இருவரும் போட்டியிட்டனர். எனவே இதில் மணல் மூட்டைகளை ஒரு காலைத் தூக்கியபடி கைகளில் இழுத்துப் பிடிக்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.  அந்த சமயம் கடும் மழையிலும் இந்த டாஸ்க்கை இருவரும் சிறப்பாக செய்து முடித்தனர்.

காலில் அடிபட்டாலும் அமீர் இந்த டாஸ்க்கில் ஒரு மணி நேரம் 44 நிமிடம் தாக்குப்பிடித்து டிக்கெட் டு பினாலே டாஸ்கில் வெற்றி பெற்று, பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் முதல் பைனல் லிஸ்ட் ஆக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இதற்கு முந்தைய டாஸ்க் அதாவது முட்டை அடிக்கும் டாஸ்க்கில் பிக்பாஸ் கேட்கப்படும் கேள்விக்கு போட்டியாளர் யார் மீது அதிக முட்டையை அடைகிறார்களோ அவர்கள் போட்டியில் இருந்து விலக்கப்படுவார்கள் என்று கூறியபோது, அந்த சமயம் பிரியங்கா மற்றும் அமீர் இருவரும் போட்டியில் இருந்து விலகும் நிலையில் இருந்தனர்.

ஆனால் ராஜு, அமீர் தன்னுடன் பைனல் லிஸ்ட் ஆக கடைசி நாள் வரை வரவேண்டும் என்று, தன்மீதே மூன்று முட்டைகளை உடைத்துக் கொண்டு பிரியங்காவுடன் டிக்கெட்டு பினாலே இடத்திலிருந்து ராஜு வெளியேறிவிட்டார். இதை அடுத்ததாக நடந்த சுற்றில் வெளிப்படுத்தினார். ஆனால் யாருக்காக விட்டுக் கொடுத்தேன் என்பதை கடைசிவரை சொல்லவில்லை.

இருப்பினும் அமீர் அதை தோண்டித் தோண்டி கேட்டதால் நாசுக்காக பதிலளித்தார். ஏனென்றால் ராஜுவிற்கு மக்கள் நிச்சயம் அதிக ஓட்டுக்களை கொடுத்து பைனல் லிஸ்ட் போட்டியாளராக ஏமாற்றுவார்கள். ஆனால் அவருடன் யார் கூட வருவார் என்பதை ராஜூ சாமர்த்தியமாக திட்டமிட்டு காய் நகர்த்தியதாக சக போட்டியாளர்கள் அவ்வபோது கிசுகிசுக்கின்றனர்.

இருப்பினும் அமீர், தன்னுடைய வாழ்க்கையில் கடினமான பாதைகளை சந்தித்ததால் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் அமையும் என பிக்பாஸ் போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் ஆசைப்படுகின்றனர். அதற்கேற்றால் போல் சிபி மற்றும் அமீர் இடையே நடந்த நேற்றைய கடுமையானப் போராடி அமீர் வெற்றி பெற்றதன் மூலம் ராஜு போட்ட திட்டம் நிறைவேறி விட்டது.

இறுதி வாரத்திற்கு செல்லும் அமீர் கடைசியில் 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு வீடு திரும்புவார். அதன் பிறகு ராஜு, பிரியங்கா இருவரில் ஒருவர்தான் இந்த சீசனின் வெற்றியாளர் என்ற தகவல் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.

Trending News