பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்ட ஐக்கி பெர்ரி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் வரிசையாக பதில் அளித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் திங்கட்கிழமை அன்று நடந்த தலைவர் போட்டியில் இமான் அண்ணாச்சிக்கும் நிரூப்பிற்கும் இடைவிடாத காரசாரமான விவாதத்தை பற்றி ஐக்கி பெர்ரி தன்னுடைய கருத்தை தெரிவித்தார்.
பொதுவாக இமான் அண்ணாச்சிக்கு, ராஜு மற்றும் நிரூப் இருவரையும் ரொம்ப பிடிக்கும் என்றும் அப்படியிருக்கையில் இமான் அண்ணாச்சியின் தலைவர் பதவியை, மிகவும் பாசம் வைத்திருந்தார் நிரூப் படித்தது அவனுக்குப் பிடிக்கவில்லை என்று ஐக்கி பெர்ரி கருத்து தெரிவித்தார்.
ஆனால் இன்னும் இரண்டு வாரங்களில் மட்டுமே நாணயத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்ட முடியும் என்பதால் இந்த வாரம் கேப்டனாக நிரூப் ஆனது சரியான முடிவு. அத்துடன் சென்ற வாரம் கடைசியாக காப்பாற்றப்பட்ட நிரூப் நாமினேஷனிலிருந்து எஸ்கேப் ஆவதற்கும் இந்த முடிவை எடுத்திருக்கலாம்.
மேலும் நிரூப்பிடம் வருண் உள்ளிட்ட மற்ற போட்டியாளர்கள் காரசாரமாக விவாதித்து முறையல்ல. தனியே கூப்பிட்டு பேசி இருந்தால் பிரச்சினை தவிர்த்திருக்கலாம். அத்துடன் 24 மணி நேரம் பிக்பாஸ் வீட்டில் நடப்பதை ஒரு மணி நேரத்தில் காண்பிப்பது மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் என்று ஐக்கி பெர்ரி பிக்பாஸ் வீட்டைப் பற்றிய பல தகவல்களை சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
எப்போதும் பிக்பாஸ் வீட்டில் சிறு பிள்ளை போல் குறும்பு செய்து கொண்டிருக்கும் பிக்பாஸ் ரசிகர்களுக்கு ஐக்கி பெர்ரி, ஓவியாவாக மாற முயற்சிக்கிறார் என்ற கேள்வியும் எழுந்தது.
ஆனால் ஐக்கி பெர்ரி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு ரசிகர்களுடன் நேரலையில் பேசிய ஐக்கி பெர்ரியின் கொஞ்சம் நிறைந்த பேச்சை மாற்றாமல் அப்படியே நடந்து கொண்டது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. அத்துடன் பிக்பாஸ் வீட்டில் ஐக்கி பெர்ரி நடிக்கவில்லை, இதுதான் அவருடைய இயல்பான சுபாவம் என்றும் ரசிகர்கள் புரிந்து கொண்டனர்.