புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பிக்பாஸில் இந்த வார நாமினேஷன் லிஸ்ட்.. போனா வாரம் தப்பிச்ச பவானி ரெட்டியை வச்சு செஞ்சுட்டாங்க

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் ஒவ்வொரு வார தொடக்க நாளான திங்கட்கிழமை அன்று, யார் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட வேண்டும் என விரும்பும் இரண்டு நபர்களை சக போட்டியாளர்கள் தேர்வு செய்வார்கள்.

அவ்வாறு தேர்வு செய்யும் நபர்கள் நாமினேஷன் லிஸ்டில் உட்படுத்தப்பட்டு, மக்கள் அளிக்கும் வாக்கின் அடிப்படையில் குறைவான வாக்கை பெறும் நபர் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்படுவார்.

எனவே அதற்கான நாமினேஷன் லிஸ்ட் தயாராகிவிட்டது அதில் பவானி ரெட்டி, அபிஷேக், பிரியங்கா, ஐக்கி பெர்ரி, இசைவாணி, அக்ஷரா, சின்ன பொண்ணு, அபினை, தாமரைச்செல்வி ஆகியோர் இந்தவார நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றுள்ளனர்.

மீதமிருக்கும் ராஜூ, நிரூப், மதுமிதா, சுருதி, இமான் அண்ணாச்சி, வருண் ஆகியோர் எலிமினேஷன் டென்ஷன் இல்லாமல் ஜாலியாக நடமாடிக் கொண்டிருக்கின்றன. மேலும் சிபி வீட்டின் தலைவராக இருப்பதால் அவரை யாரும் நாமினேட் செய்யவில்லை.

bhavani-reddy
bhavani-reddy

இதில் சுவாரசியம் என்னவென்றால் கடந்த வாரம் எலிமினேஷன் ரவுண்டுக்குகே செல்லாத பவானி ரெட்டியை இந்த வாரம் போட்டியாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு நாமினேட் செய்துள்ளனர்.

மேலும் பவானி ரெட்டியின் நடவடிக்கை சென்ற வாரத்தை விட இந்த வாரம் கொஞ்சம் கடுமையாக இருப்பதால் ரசிகர்களே வியப்பில் ஆழ்ந்துள்ளனர். இருப்பினும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் பவானி ரெட்டிக்கு ஆர்மி ஆரம்பித்த ரசிகர்கள் அவரை காப்பாற்றுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News