வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

தெரிந்தே அபிநய்யை காப்பாற்றாத பிரியங்கா.. என்ன ஒரு வில்லத்தனம்!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சிகள் தற்போது 70 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. எனவே இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்துவிடும். ஆகையால் கடந்த வாரம் முழுவதும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டிகளும் கடுமையாக கொடுக்கப்பட்டது,

அத்துடன் இந்த வார நாமினேஷன் லிஸ்ட்டில் வீட்டில் இருக்கும் 11 போட்டியாளர்களும் இடம்பெற்றுள்ளதாக பிக்பாஸ் அறிவித்திருந்தார். அதன் பிறகு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்று சிபி, நீருப், தாமரை செல்வி ஆகியோர் தங்களைக் காப்பாற்றிக் கொண்டனர்.

இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற போட்டியில் மீதமிருக்கும் 8 பேர்கள் இரண்டு நபர்களாக கூட்டு சேர்ந்து, அதில் யார் மற்றவரை காப்பாற்ற வேண்டும் என்று கேட்டபோது இருவரும் ஒரே நபரை கூறினால், அவர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.

இதில் ராஜு- சஞ்சீவ் இருவரும் சஞ்சீவ் பெயரை காண்பித்தது எலிமினேஷனிலிருந்து சஞ்சீவ் தப்பித்துவிட்டார். அதைப்போல் பாவனி-அமீர் இருவரும் அமீர் புகைப்படத்தை காண்பித்து அமீர் எலிமினேஷனிலிருந்து தப்பித்துவிட்டார். இதைத்தொடர்ந்து பிரியங்கா-அபிநய் இருவரும் தங்களுடைய பெயரை மாற்றி மாற்றி காண்பித்து போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

ஆகையால் இருவரும் இந்தவார நாமினேஷன் லிஸ்டில் சேர்ந்துள்ளனர். இந்த டாஸ்க் நடைபெற்ற பிறகு பிரியங்கா பாவனியிடம், அபிநய் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் வரவேண்டும் என்பதற்காகவே அபிநய் புகைப்படத்தை நான் காட்டவில்லை என்றும் மக்கள் அபிநய்யை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை இந்த வாரம் தெரிந்துவிடும் என்றும் விஷம தனத்துடன் பிரியங்கா பேசினார். ஏனென்றால் பாவனி அபிநய்யை விலகி இரு என்று சொன்ன பிறகு அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் பாவனியையே அபிநய் சுற்றி சுற்றி வந்தது பிரியங்காவிற்கு தவறாக தெரிந்திருக்கிறது.

இருப்பினும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர் பிரியங்கா நிச்சயம் அபிநய் புகைப்படத்தை காண்பித்து அவரை இந்த வாரம் காப்பாற்றுவார் என எதிர்பார்த்த நிலையில் வில்லத்தனமாக பிரியங்கா செய்திருக்கும் செயலால் ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

Trending News