வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

அமீரை வசமாக சிக்க வைத்த பிரியங்கா.. என்ன ஒரு நரித் தந்திரம்!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் வெளியாகும் ப்ரம்மாவின் அடிப்படையில், அந்த நாளின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் விறுவிறுப்பை கூட்டிக்கொண்டிருக்கிறது. மேலும் இந்த வாரத்தின் தொடக்க நாளில் இருந்தே டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இன்னிலையில் நிரூப் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் இருந்து முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து தாமரை, பாவனி, பிரியங்கா, ராஜு ஆகியோரும் போட்டியில் இருந்து நீக்கப்பட்டனர். ஆகையால் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் ஆனது சஞ்சீவ், அமீர், சிபி ஆகிய மூவருக்கும் இடையே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் டிக்கெட்டு ஃபினாலே டாஸ்க்கில் இருக்கும் மூன்று பேருக்கும் சக போட்டியாளர்கள் கேள்வி கேட்பார்கள்.அவர்கள் கேட்கும் கேள்விக்கு சக போட்டியாளர்களும், அந்த 3 நபர்களும் சரியாக பதில் அளித்தால் அவர்கள் முன்னேறிச் செல்லலாம் என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது.

இதில் ‘வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக பிக்பாஸ் வீட்டில் நுழைந்து, உன்னை பிரபலப்படுத்தி கொள்ள பாவனியை பயன்படுத்திக் கொள்கிறாய். இது உன்னுடைய ஸ்டேட்டஜி’ என்று அமீரிடம் பிரியங்கா கேள்வி கேட்கிறார். இதற்கு சற்றும் தயங்காமல் அமீர் ஆமாம் என்று பச்சை விளக்கை காட்டுகிறார்.

இவ்வாறு ஏற்கனவே கடந்த வாரம் நாமினேஷனின் போது அமீர் பாவனியை நாமினேட் செய்தது ரசிகர்கள் மட்டுமல்லாமல் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களும் ஷாக் ஆனார்கள். அதைத்தொடர்ந்து பிரியங்கா தற்போது சரியான நேரத்தில் அமீரிடம் பாவனியை குறித்த கேள்வியை கேட்டு சீண்டி விட்டுள்ளார்.

இவ்வாறு அமீர் பாவனியிடம் பொய்யான காதலை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார் என்பதை பிரியங்கா பலமுறை சுட்டிக்காட்டி கொண்டிருக்கிறார். இதனால் இனிவரும் நாட்களில் அமீர் மற்றும் பாவனி இடையே பெரும் சண்டை வெடிக்கும் என்று தற்போது வெளியான ப்ரோமோவின் மூலம் தெளிவாக தெரிய வந்துள்ளது.

Trending News