பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நேற்று கோலாகலமாக நடைபெற்றது. மக்கள் ஓட்டின் அடிப்படையில் ராஜு முதலிடத்தையும், பிரியங்கா இரண்டாம் இடத்தையும் பிடித்தார். எனவே முதல் இடத்தைப் பிடித்த ராஜுவுக்கு 50 லட்சம் பரிசுத் தொகையுடன் டிராபி வழங்கப்பட்டது.
இரண்டாம் இடத்தைப் பிடித்த பிரியங்கா, ராஜீவுடன் 106 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்தும், வெற்றி பெறாவிட்டாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான போட்டியாளராக மாறியுள்ளார். அத்துடன் இவர் வாரத்திற்கு இரண்டு லட்சம் சம்பளத்துக்கு ஒப்பந்தமாகி, 16 வாரம் வீட்டில் இருந்ததற்காக கிட்டத்தட்ட 30 லட்சத்தை சம்பளமாக பெற்றுள்ளார்.
எனவே இரண்டாம் பரிசு கிடைத்த பிரியங்காவிற்கு ரூபாய் 30 லட்சம் கிடைத்தது பெருமைக்குரிய விஷயம். ஆனால் அவர் கிடைத்த 30 லட்சத்தில் 30% டாக்ஸ் கட்டியாக வேண்டும். ஆகையால் 106 நாட்கள் பிரியங்கா வீட்டில் இருந்ததற்காக கிடைத்த 30 லட்சத்தில் இருந்து ரூபாய் 9 லட்சத்தை வரியாக செலுத்த உள்ளார்.
இந்த தகவல் தற்போது இணையத்தில் பிக்பாஸ் ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. அத்துடன் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 18 போட்டியாளர்களில் அதிக சம்பளம் வாங்கிய ஒரே போட்டியாளர் பிரியங்கா தான்.
எனவே விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பரிச்சயமான பிரியங்கா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் எக்கச்சக்கமான ரசிகர்களை சம்பாதித்து விட்டார். அத்துடன் ராஜு மற்றும் பிரியங்கா காம்போ பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் பிரியங்கா பிக்பாஸ் வீட்டில் செய்த அட்ராசிட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் உடல் நலக் குறைவை காரணம் காட்டி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலிருந்து வெளியேறாமல் கடைசிவரை நிலைத்து நிற்கின்ற பிரியங்காவிற்கு சோஷியல் மீடியாவில் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்படுகிறார்.