ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 26, 2025

தூண்டிலில் சிக்கிய தாமரையும் பிரியங்காவும்.. மீண்டும் மீண்டும் தன்னை நிரூபிக்கும் ராஜு

விஜய் டிவியில் களைகட்டி வரும் பிக் பாஸ் சீசன்5இல் நேற்றைய தீபாவளி பண்டிகைக்கு போட்டியாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் பல சர்ப்ரைஸ் கொடுத்த பிக் பாஸ் நிகழ்ச்சி. வழக்கம்போல் நாரதர் வேலையை டாஸ்க் என்ற பெயரில் ஆரம்பித்த பிக்பாஸ் பிரியங்காவின் தாமரையும் அழைத்து ரகசிய டாஸ்க் கொடுத்தார்.

மேலும் தீபாவளி பண்டிகைக்காக புத்தாடைகளையும் உறவினர்களிடமிருந்து கடிதங்களையும் உணவுகளையும் போட்டியாளர்களுக்கு அளித்து மேலும் பலப்பல கலைநிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்ச்சி படுத்தியது பிக்பாஸ்.

பிறகு தாமரைக்கும் பிரியங்காவுக்கு அளித்த முதல் டாஸ்கே கலவரமாக இருந்தது அந்த டாஸ்மாக் கடையை எப்படியாவது மாற்ற வைக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அதனால் இந்த டாஸ்கை செய்ய தயாரானார்கள் பிரியங்காவும் தாமரையும். இதில் நேக்காக தாமரையை மாற்றி விட்டு நைசாக நழுவிய பிரியங்கா.

raju-bb5-cinemapettai
raju-bb5-cinemapettai

ராஜுவின் ஆடையை கரைப்படுத்த பல பிளான்களை போட்டனர் பிரியங்காவும் தாமரையும். அதன்படி தாமரை கால் தடுக்கி கீழே விழுவது போல நடித்து ராஜுவின் ஆடையை கரைப்படுத்தினார். ஆனால் இதை பெரிய விஷயமாக ஆக்காமல் பொறுமையாக கையாண்டார் ராஜு.

ஆனாலும் அவரால் இந்த தவறை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. முன்கூட்டியே ஆடையில் கரை பட்டு விடும் என்று தாமரை இடமும் பிரியங்கா விடமும் அவர்கள் செய்யும் செயலைக் கண்டு எச்சரித்தார். ஆனால் அதையும் மீறி இவர்கள் செய்ததால் சற்று வருத்தம் அடைந்தார். அந்த இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் பெரிய கலவரமே வந்திருக்கும் பிக்பாஸ் நினைத்தது போல் நாரதர் வேலையை நன்றாக பார்த்து வருகிறார்.

Trending News