வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

ராஜுவின் மீது வீசிய அணுகுண்டு.. வெளியே வந்து காரணத்தையும் உடைத்த சுருதி!

தற்பொழுது பிரபலமாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன்5. இந்நிகழ்ச்சியில் வாரவாரம் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார். அந்தவிதமாக இந்நிகழ்ச்சியின் ஐந்தாம் வாரத்தில் வெளியேறிய சூப்பர் மாடல் சுருதி. இவர் போட்டியில் சிறப்பாக விளையாடினார். ஆனால் பாவனியுடன் சேர்ந்ததால் என்னவோ அவருக்கு ஆரம்பித்தது கெட்ட நேரம். பாவனி தன்னுடன் கூட்டு சேரும் அனைவரையும் காலி செய்து, பாவனி மட்டும் பாதுகாப்பாக விளையாடி இப்போட்டியில் இன்னும் நீடித்து வருகிறார்.

இவ்வாறு பாவனியுடன் கூட்டு சேர்ந்து மக்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி மக்களின் தீர்ப்பால் வெளியே சென்றவர் தமிழகத்தைச் சேர்ந்த மாடலிங் துறையில் இருந்து வரும் சுருதி. இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் பல பேட்டிகளை அளித்து வருகிறார். அந்த விதமாக இவர் தற்பொழுது அளித்துள்ள பேட்டியில் ராஜு குறித்துப் பேசியது இணையதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அந்தப் பேட்டியில் சுருதி எலிமினேட் ஆகி வெளியே செல்லும்போது அனைத்து போட்டியாளர்கள் இடமும் தனது கருத்துக்களை கூறி போட்டியில் நன்றாக விளையாட வேண்டும் என வாழ்த்தினார். ஆனால் ராஜுவிடம் நான் உங்களை எந்த டார்கெட்டும் செய்யவில்லை. உங்களிடம் எந்த ட்ரிக்ஸ்சும் பயன்படுத்தவில்லை என்று கூறி போட்டியாளர்கள் இடமும் மக்களிடமும் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டு வெளியே சென்று இருப்பார். அவ்வாறு ஏன் அவர் கூறிவிட்டு சென்றார்கள் என்ற கேள்விக்கு, சுருதி குழப்பத்தை போக்கும் வகையில் தற்பொழுது இந்தப் பேட்டியில் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்.

அதாவது நிரூப்பின் பூமி ஆற்றல் நாணயத்திற்கான வல்லமையை குறிக்கும் வாரத்தில், அதற்கான ஆளுமையில் அவருக்கு பெட்ரூம் பகுதியை ஆளுமை செய்யும் வல்லமையை பெற்றிருந்தார். எனவே அதனைப் பயன்படுத்தி அவர் பல டாஸ்க்குகளை போட்டியாளர்களுக்கு கொடுத்து வந்தார்.

அப்படி ஒரு டாஸ்க்கு கொடுக்கும் விதமாக அக்ஷராவிடம் பாவனியின் முகத்தில் மீசை வரைய வேண்டும் என்ற ஒரு டாஸ்கை கொடுத்தார். ஏற்கனவே அக்ஷராவிற்கும் பாவணிக்கும் இடையே பல கருத்து வேறுபாடுகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் டாஸ்க்கென்று வந்ததால் பாவனி அக்ஷராவிடம் எந்த மறுப்பும் சொல்லாமல் மீசையை வரைந்து கொண்டார்.

இதேபோல் ராஜுவிடம் ஒரு டாஸ்க்கை நிரூப் கொடுத்தார். அந்த டாஸ்க்கில் அக்ஷராவுக்கு மீசை வரைய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதைப்போல் அக்ஷராவிடம் அந்த மீசையை வரைய விடாமல் ராஜுவை தடுக்க வேண்டும் என்று மற்றொரு டாஸ்க்கையும் கொடுத்தார். ஆனால் இது ஒரு டாஸ்க் என்பது பற்றி, தனக்கும் மற்ற போட்டியாளர்களுக்கும் தெரியாது என்று சுருதி பேட்டியில் கூறியிருந்தார்.

மேலும், இது தெரியாமல் இருந்த சுருதி, ராஜுவும் அக்ஷராவும் மிகவும் நெருங்கின அண்ணன் தங்கை போல் பழகுவர். எனவே இவர்கள் டாஸ்க்கு செய்வதை பார்த்து ஏதோ டிராமா செய்கிறார்களோ என்று தவறாக நினைத்துவிட்டாராம். பிறகு ராஜு பாவனியிடம் வந்து, ‘உனக்கு அசிங்கமா இல்லையா, நீ ஏன் அக்ஷராவை மீசை வரைய விட்ட’ என கேட்டதும் டென்ஷனான சுருதி இதுதான டாஸ்க்கு. அதைத்தான் அவள் செய்தாள். ஆனால் நீங்க உங்கள் டாஸ்க்கை செய்யவில்லையே உங்களுக்கு அசிங்கமா இல்லையா என திருப்பி கேட்டாராம். இதை ராஜு அப்பொழுதே சுருதி இடம் கேட்காமல் விட்டுவிட்டாராம்.

பிறகு இதைப்பற்றி குளியலறையில் சுருதி குளிப்பது தெரியாமல் ராஜு அவர் கூட்டணியுடன் மீட்டிங் போட்டு டிஸ்கஸ் செய்து சுருதி என்னையும் அக்ஷராவையும் பிரிக்க இவ்வாறு ட்ரிக்ஸ் செய்றாங்க என நடந்ததை தவறாக புரிந்து கொண்டு ராஜு மற்றவர்களிடம் தன்னைப் பற்றி பேசி விட்டார் என்றார் சுருதி. அதனால் தான் நான் வீட்டிலிருந்து வெளியே செல்லும் பொழுது ராஜுவிடம் அவ்வாறு கூறியதாக தன் மனக் கருத்தை பேட்டி ஒன்றில் சுருதி முன்வைத்துள்ளார்.

Trending News