விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரத்தின் தொடக்க நாளன்று பிக்பாஸ் வீட்டின் தலைவருக்கான போட்டி நடைபெறும். அந்த வகையில் இந்த வார கேப்டன் பதவிக்கான போட்டியில் இமான் அண்ணாச்சி, சிபி, அபிஷேக் ராஜா ஆகிய 3 பேர் போட்டியிட்டனர்.
இந்தப்போட்டியில் இமான் அண்ணாச்சி வெற்றிபெற்றாலும், நிரூப் தன்னுடைய நாணயத்தின் ஆற்றலினால் பிக்பாஸ் வீட்டின் தலைவரானார். இவ்வாறு நடப்பது புதிதல்ல. இருப்பினும் இமான் அண்ணாச்சி டாஸ்கில் வெற்றி பெற்று இந்த வாரத்தின் கேப்டனாக மாறுவார் என்று சக போட்டியாளர்கள் நினைத்துக்கொண்டிருந்த நிலையில், நிரூப் திடீரென்று தன்னுடைய நாணயத்தின் ஆற்றலை பயன்படுத்தி இமான் அண்ணாச்சியை காலை வாரி விட்டார்.
இந்த முடிவை சற்றும் ஏற்றுக் கொள்ளாத சக போட்டியாளர்கள் வீட்டின் தலைவரான நிரூப் சொல்வதை கேட்க கூடாது என்ற முடிவிற்கு வந்து விட்டனர். அதற்கேற்றார்போல் நிரூப்பும் கேப்டன் பதவி கைக்கு வந்ததும் ஓவராக அதிகாரம் செய்ய திட்டமிட்டிருந்தார்.
ஆனால் அதனை செயல்படுத்த முடியாத அளவிற்கு பிக்பாஸ் சரியான ஆப்படித்துவிட்டார். ஏனென்றால் பிக் பாஸ் கேப்டன் பதவிக்கு நாணயத்தை பயன்படுத்தும் நபருக்கு ஏதாவது ஒரு தண்டனையை பிக்பாஸ் வழங்குவார்.
அந்த வகையில் இந்த வாரம் நிரூப் தன்னுடைய நாணயத்தை வைத்து கேப்டன் ஆனதற்கு, அவர் யாருடன் பேசினாலும் பேசுபவரின் உயரத்திற்கு ஏற்றவாறு குணிந்து பேசவேண்டும் என்று வினோதமான தண்டனையை பிக் பாஸ் நிரூப்பிற்கு வழங்கிவிட்டார்.
இதனால் உயரத்தில் மற்றவர்களை விட அதிகமாக இருக்கும் நிரூப், மற்ற போட்டியாளர்கள் இடம் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருக்கிறார். அதற்கேற்றார்போல் பிக்பாஸ் போட்டியாளர்களும் நிரூப்பை புரட்டி எடுத்து கொண்டிருக்கின்றனர். எனவே நாணயத்தின் சலுகையின் மூலம் பிக்பாஸ் தலைவர் பதவியை பெற்று நிரூப்பின் நிலைமை இந்த வாரம் முழுவதும் திண்டாட்டம்தான்.