வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

சரக்கு தீர்ந்ததால் கடைசி வாரத்தில் கழுத்தறுக்கும் பிக்பாஸ்.. செம மொக்கை பண்றீங்க

100 நாட்களுக்கும் மேலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்பது இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தெரிந்துவிடும். எனவே 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த சீசனின் தற்போது அமீர், பாவனி, பிரியங்கா, ராஜு, நிரூப் ஆகிய 5 பேர் இறுதிக்கட்டத்தில் உள்ளனர்.

இந்த சீசனின் இறுதி வாரம் என்பதால் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அதற்கு மாறாக இதுவரை இல்லாத அளவிற்கு ரொம்பவே மொக்கையாக பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

இறுதி வாரம் என்பதால் சுவாரஸ்யமான நிகழ்வுகளும் விருவிருப்பான போட்டிகளும் அரங்கேறும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிச்சம். மேலும் இதுவரை பிக் பாஸ் சீசன5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறிய போட்டியாளர்கள் ஒவ்வொருவராக மீண்டும் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சிக்கு விருந்தினராக வருகை தந்துள்ளனர்.

எனவே அவர்கள் வீட்டில் இருக்கும்போது பிக் பாஸ் ஏதாவது ஒரு டாஸ்க் கொடுத்து காரசாரமான நிகழ்வுகளை அரங்கேற்றி இருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. அத்துடன் இந்த சீசனின் வெற்றியாளர் குறித்த தகவலும் இணையத்தில் வெளியாகி கொண்டிருக்கிறது.

குறிப்பாக நிகழ்ச்சி துவங்கப்பட்ட நாள் முதலே பிரியங்கா மற்றும் ராஜு இருவரில் ஒருவர்தான் வெற்றியாளர் என எதிர்பார்த்த நிலையில், தற்போது இணையத்தில் வெளியான ஓட்டிங் லிஸ்ட் இன் அடிப்படையில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆக நிரூப் மற்றும் பாவனி இருவருள் ஒருவர்தான் என்ற அதிர்ச்சியான தகவலும் வெளியாகி கொண்டிருக்கிறது.

ஆகையால் மக்கள் ஓட்டில் அதிரடி திருப்பம் ஏற்பட்டு, யார் இந்த சீசனின் வெற்றியாளர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தற்போது பிக்பாஸ் வீட்டில் விருந்தினராக வந்திருக்கும் போட்டியாளர்கள் இன்னும் ஒரு சிலர் தினம் பிக்பாஸ் வீட்டில் இருப்பார்கள்.

அதன் பிறகு வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியேறி விடுவார்கள் இருப்பினும் மற்ற சீசன்களிலும் இதுபோன்று வெளியேறிய போட்டியாளர்கள் வீட்டிற்குள் வந்தாலும் அவர்களை வைத்து ரசிகர்களுக்கு பிடித்தமான டாஸ்க்கள் நடைபெறும். ஆனால் இந்த சீசனில் விறுவிறுப்பு இல்லாமல் கடைசி வாரம் செல்வது ரசிகர்களை ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News