புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இந்த வாரம் பிக் பாஸ் எவிக்சனில் சிக்கப் போவது யார் தெரியுமா.? இணையத்தில் லீக்கான வோட்டிங் லிஸ்ட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது ஒரு மாதம் நிறைவடைந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இன்னிலையில் ஒவ்வொரு வார இறுதி நாட்களான ஞாயிற்றுக்கிழமை அன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒரு நபர் வெளியேற்றப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இதுவரை நமிதா மாரிமுத்து, அபிஷேக் ராஜா, நாடியா சாங், சின்னப்பொண்ணு ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளன. எனவே இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து மக்கள் அளித்த வாக்கின் அடிப்படையில் குறைந்த வாக்குகளைப் பெற்ற சுருதி மற்றும் அபினை இருவரில் ஒருவர்தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

அத்துடன் பஞ்சபூத நாணயங்களை வைத்துள்ள சுருதி, அந்த நாணயத்தை வைத்து பிக்பாஸ் வீட்டிலேயே இருப்பதற்கும் அதிக வாய்ப்பிருக்கிறது. எனவே சுருதி தனக்கு பதில் வேறு ஒருவரை நாமினேட் செய்து அவரை வெளியேற்றமும் வாய்ப்புள்ளது. ஆகையால் இந்த வாரம் என்ன நடக்கப் போகிறது என்பது யாருக்கும் தெரியாமல் மிகவும் சர்ப்ரைஸாக வைத்துள்ளனர்.

bb5-vote-list-cinemapettai
bb5-vote-list-cinemapettai

அத்துடன் பவானி ரெட்டி, நிரூப், வருண், இசைவாணி, சுருதி ஆகிய 5 பேரும் நாணயத்தை வசப்படுத்தியதால் அவர்கள் நாணயத்தின் சலுகையால் ஏகபோக அதிகாரத்தை பிக்பாஸில் தொடர்ந்து பெற்று வருகின்றன.

எனவே இவர்கள் யாரும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வர வாய்ப்பில்லை இவர்களை தவிர வேறு எவராவது பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற உள்ளனர்.

Trending News