விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் ஒவ்வொரு வாரத்தின் தொடக்க நாளான திங்கட்கிழமை அன்று நாமினேஷன் லிஸ்ட் தயாராகும். அந்தவகையில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் அக்ஷரா, சிபி, அபினை, தாமரை, அமீர், நிரூப், இமான் ஆகிய 7 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இதில் நிரூப்பிடம் நாணயம் இருப்பதால், அதனுடைய சலுகையை வைத்து நாமினேஷன் லிஸ்டில் இல்லாதவர்களை நாமினேட் செய்துகொள்ள பிக்பாஸ் அதிகாரத்தை வழங்கினார். அப்போது நிரூப், சஞ்சீவ் பெயரை பரிந்துரைத்து அவரை நாமினேஷன் லிஸ்டில் சேர்க்கத் திட்டமிட்டார்.
சஞ்சீவ் மற்றும் நிரூப் இருவருக்குமிடையே ஒரு டாஸ்க் நடத்தி அதில் வெற்றி பெற்றால் மட்டுமே நாமினேஷனிலிருந்து எஸ்கேப் ஆகும் வாய்ப்பை பிக் பாஸ் கொடுத்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக சஞ்சீவ் அந்த டாஸ்க்கில் வெற்றி பெற்று நிரூப்பை மீண்டும் நாமினேஷன் லிஸ்டில் சேர்த்து விட்டார்.
தற்போது ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் லிஸ்டில் இடம் பெறும் அபினை, இந்த வாரமும் இடம் பெற்றுள்ளார். அத்துடன் கடைசி வாரம் கூட அபினை இறுதியாக காப்பாற்றப்பட்டுள்ளார்.அபினை பிக்பாஸ் வீட்டில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்த ஒரு விளையாட்டையும் சுவாரசியமாக இதுவரை விளையாடவில்லை.
அவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் இடமே தெரியாமல் இருப்பதால் மக்கள் மனதை கவர தவறிவிட்டார். ஆகையால் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து அபினை வெளியேறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. மேலும் நிரூப் கடந்த சில நாட்களாக ஆர்வம் குறைந்து விளையாடுவதால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் நிரூப்பிற்கு குறைந்த வாக்குகளை அளித்து வெளியேற்ற வாய்ப்பிருக்கிறது.
ஆகையால் இந்த வாரம் நிரூப் மற்றும் அபினை இருவரும் யார் வெளியேற போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அத்துடன் இந்த வாரம் இரண்டு நபர் எலிமினேட் ஆவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.