திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

முதல் முதலாக நடைபெற்ற ஓபன் நாமினேஷன்.. அடுத்து வெளியேறும் நபர் இவர் தான்!

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி தற்போது கிராண்ட் பினாலே நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.  இன்னிலையில் தற்போது வீட்டில் இருக்கும் 8 போட்டியாளர்களுக்கும் டிக்கெட் டு பின்னாலே என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு ஒவ்வொருவரும் மும்முரமாக போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அத்துடன் ஞாயிற்றுக்கிழமை எலிமினேஷனுக்குப் பிறகு  திங்கட்கிழமை நாமினேஷன் லிஸ்ட் வெளியாகும்.  அந்த வகையில் இந்த முறை முதன்முதலாக  ஓபன் நாமினேஷன் பிக் பாஸ் வீட்டில் நேற்று நடைபெற்றது. இதில் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் அனைவரும் இரண்டு நபர்களை முகத்திற்கு நேராக சரியான காரணத்துடன் நாமினேட் செய்ய வேண்டும்.

இவ்வாறு  வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் பெரும்பாலானோர்  நிரூப்பை நாமினேட் செய்தனர். அதன்பிறகு பிக்பாஸ் வீட்டில் இருக்கும்  போட்டியாளர்கள் அனைவருமே இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றதாக பிக் பாஸ் அறிவித்தார்.

ஆகையால் சென்ற வாரத்தை போல் இந்த வாரமும் பிக்பாஸ் வீட்டில் தற்போது இருக்கும்  நிரூப், தாமரைச்செல்வி, பிரியங்கா, பாவனி, ராஜு, சஞ்சீவ், அமீர்,  சிபி ஆகிய 8 பேரும் இந்த வாரம் மக்கள் ஓட்டுக்காக காத்துள்ளனர்.

இதில் அமீர் மற்றும் நிரூப் இருவருள் ஒருவர்  இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற அதிக வாய்ப்பிருக்கிறது. அதிலும் குறிப்பாக சென்ற வாரம்  நூலிழையில் தப்பித்தல் நிரூப் இந்த வாரம் நிச்சயம் எலிமினேட் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வாரம் எதிர்பாராமல் வருண் மற்றும் அக்ஷரா இருவர் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை யார் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News