திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

மேடையில் உருக்கமான பேசி கண்கலங்க வைத்த ராஜு.. நெகிழ்ந்து போன கமல்

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நடைபெற்றது.மக்கள் அளித்த ஓட்டின் அடிப்படையில் ஆகிய நிரூப், பாவனி, ராஜு, பிரியங்கா, அமீர் ஆகிய  5 பேர் இறுதிச்சுற்றில் ஒருவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். எனவே மக்கள் அளித்த அதிக வாக்கின் ராஜு முதலிடத்தையும், பிரியங்கா இரண்டாமிடத்தையும் பாவனி, அமீர், நிரூப் அடுத்தடுத்த இடங்களை பெற்றனர்.

பிக் பாஸ் சீசன்5 டைட்டில் வின்னர் ராஜு வெற்றி கோப்பையை கையில் ஏந்திக்கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக இருட்டான பகுதியில் நின்று வேலை செய்து கொண்டிருக்கும் எடிட்டிங் கலைஞர்களுக்கும், கேமராமேன், லைடிங் மேன் உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டு திரையில் தெரியாத உழைப்பாளிகளுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன் என்று உருக்கமாக பேசினார்.

ஏனென்றால் விஜய் அவார்ட்ஸ் போன்ற நிகழ்ச்சியில் கமலஹாசன் அவர்களுக்கு ஏவி போட்ட ராஜு ,தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவருக்கும் ஒருவர் ஏபி போடும் அளவுக்கு முன்னேறி இருக்கிறார் என்று அவரது நெகிழ்ச்சியான பேச்சு, பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அத்துடன் இன்று காலையில் இருந்தே பயமாக இருந்ததாகவும், சிவகார்த்திகேயன் மூன்று நண்பர்களுடன் வருகிறார் என்ற செய்தி கேட்டதும் தன்னைத்தான் வீட்டிலிருந்து அழைத்து செல்ல வருகிறார்கள் என்று நினைத்துக் கொண்டதாகவும் தற்போது வெற்றியாளராக மக்கள் மாற்றியிருப்பது மிகுந்த சந்தோசத்தை அளிப்பதாகவும் கூறினார்.

இதுவரை ஓட்டுப் போட்டு ஒவ்வொரு முறையும் என்னை காப்பாற்றிய மக்களுக்கு நன்றி சொல்லவில்லை. ஏனென்றால் அதற்கு மேலாக அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று மனதில் இருந்தது. ஆனால் இன்று அதிக ஓட்டுக்கள் மூலம் என்னை வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும் என்று ராஜு ரசிகர்களுக்கு நன்றி கூறினார்.

இந்த சீசனின் பக்கா என்டர்டைன்னராக இருந்து சக போட்டியாளர்களை மட்டுமல்லாமல் பிக்பாஸ் ரசிகர்களையும் ரசிக்க வைத்த ராஜு, ஒவ்வொரு முறையும் நாமினேட் செய்யப்படும்போது அதிக வாக்குகளைப் பெற்ற முதல் நபராக காப்பாற்றப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News