வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

இந்த சீசனின் டாப்-5 பைனல் லிஸ்ட்.. பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர்தான்!

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரே வாரத்தில் இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்பது தெரிந்துவிடும். இன்னிலையில் வீட்டில் இருக்கும் தாமரைச்செல்வி, நிரூப், பாவனி, அமீர், பிரியங்கா, ராஜு இவர்களுள் நிரூப் மற்றும் அமீர் இருவரும் அடுத்த வாரத்திற்கு முன்னேறி உள்ளனர்.

அவர்களைத் தொடர்ந்து மக்கள் ஓட்டின் அடிப்படையில் யார் அதிக வாக்குகள் பெற்று இருக்கிறார்களோ, அவர்கள் நேரடியாக மூன்றாவது பைனல் லிஸ்ட் ஆக தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில் மீதமிருக்கும் நான்கு பேரில் ராஜு மூன்றாவது பைனல் லிஸ்ட் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவரைத் தொடர்ந்து பிரியங்கா, நான்காவது பைனல் லிஸ்ட் ஆகவும் பாவனி ஐந்தாவது பைனல் லிஸ்ட் ஆகவும் தேர்வாகியுள்ளார். எனவே ஆறாவது இடத்தை பிடித்துள்ள தாமரை இந்த வாரம் எலிமினேஷன் ஆகப் போகிறார். எனவே பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் கடைசி கடைசியாக தாமரை எலிமினேட் செய்யப்பட உள்ளார்.

ஆனால் தாமரை கடந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒரு மனதுடன் ஒரு போட்டியாளர்கள் தேர்வு செய்து பைனலுக்கு அனுப்பலாம் என்று முடிவெடுத்தபோது, தாமரையின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டது. ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத தாமரை, அந்த வாய்ப்பை நழுவ விட்டதால் தற்போது எலிமினேஷன் செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஒருவேளை அந்த வாய்ப்பை தாமரை பயன்படுத்தியிருந்தால் ஐந்தாவது பைனல் லிஸ்ட் ஆக பாவனிக்கு பதில் தாமரை சென்றிருப்பார். அதன்பிறகு பாவனி எலிமினேட் செய்யப்பட்டு இருப்பார். இருப்பினும் தாமரை சீசனின் ஐகானாக கருதப்படுகிறார்.

எனவே போட்டியின் கதைக்களம் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் யார் வெற்றியாளர் என்பதை குறித்த பரபரப்பான கேள்விக்கு இன்னும் ஒரு சில நாட்களில் விடை தெரிந்துவிடும். அத்துடன் பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் வெற்றியாளராக ராஜு அல்லது பிரியங்கா ஒருவராகத்தான் இருக்க முடியும் என்று ரசிகர்கள் அடித்துக் கூறுகின்றனர்.

Trending News