சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

பைத்தியக்கார பட்டம் கொடுக்க பார்க்கும் ஏஜென்ட் டீம்.. வாயை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ்

BB7 – Bully Gang: பிக் பாஸ் வீட்டில் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளிய அனுப்பி இருப்பது ஏஜென்ட் டீமுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது. இப்படியே கும்பலாக சேர்ந்து யாரை வேண்டுமானாலும் கார்னர் செய்து அனுப்பிவிடலாம் என்று முடிவெடுத்து விட்டார்கள் போல. மீண்டும் தங்களுடைய அராஜக ஆட்டத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள்.

வீட்டிற்கு தேவையான பொருட்களை எடுப்பதற்கு பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒருவர் ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்து ஒருவர் செல்வது வழக்கம். இன்று விசித்ரா அர்ச்சனாவை அனுப்பினார். இது ஏஜென்ட் டீமுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. அர்ச்சனா போகவே கூடாது என கூச்சல் போட்டவர்கள், அர்ச்சனா சென்று வந்த பிறகும் மீண்டும் மீண்டும் அவரை வம்புக்கு இழுத்துக் கொண்டே இருந்தார்கள்.

விசித்ரா மற்றும் தினேஷ் அர்ச்சனா பக்கம் பக்கபலமாக நிற்பது மாயாவுக்கும், பூர்ணிமாவுக்கும் சுத்தமாக பிடிக்கவில்லை. இது பத்தாது என்று ஜோவிகா வழக்கம் போல தினேஷை மரியாதை இல்லாமல் நீ, வா, போ என்று பேசினார். பூர்ணிமாவும் தினேஷை துச்சபடுத்துவது போல் சில வார்த்தைகளை உபயோகித்தார். எதற்கும் அடிபணியாததால் ரெட் கார்ட் பிளானை கையில் எடுத்து விட்டார்கள் அராஜகக் கூட்டத்தினர்.

Also Read:பிரதீப்பை உள்ள கொண்டு வர சரியாக காய் நகர்த்தும் விசித்ரா.. மீண்டும் மீண்டும் சேர்ந்து அசிங்கப்படும் ஏஜென்ட் டீம்

பூர்ணிமா உடனே பிக் பாஸ் எனக்கு இங்கே இருப்பது பாதுகாப்பாக இல்லை என்று உருட்டுவதற்கு தொடங்கினார். அவரை தொடர்ந்து மாயா பிக் பாஸ் இங்கே நடப்பது சரி இல்லை, என்னை கன்ஃபஷன் ரூமுக்கு கூப்பிடுங்கள் என்று ஒரு பக்கம் கதறினார். இவர்கள் பக்கம் நின்றால் தான் சேஃப் என மற்ற போட்டியாளர்களும் சேர்ந்து கொண்டார்கள்.

இவர்கள் எல்லோரும் சேர்ந்து அர்ச்சனா மனநிலை ஒரே மாதிரியாக இல்லை என்று நிரூபிக்க முயன்று கொண்டிருக்கிறார்கள். அவரைப் போன்ற ஒரு ஆளுடன் இருப்பது பாதுகாப்பாக இல்லை என்று நீலி கண்ணீர் வடிக்க ரெடியாகி கொண்டு இருக்கிறார்கள். காலையில் அர்ச்சனா ஏதோ சொல்ல அதற்கு மாயா நீ முதல்ல மெடிக்கல் ரூமுக்கு போ என்று நக்கலாக சொன்னார்.

பாதுகாப்பு இல்லை என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்தி எதை வேண்டுமானாலும் ஜெயித்து விடலாம் என்று நினைக்கிறார்கள் ஏஜென்ட் டீம். இவர்கள் அர்ச்சனாவை உள்ளே கஷ்டப்படுத்தி சந்தோஷம் பார்க்கிறார்கள், அது அர்ச்சனாவுக்கு ஓட்டாக மாறுகிறது என்று இவர்களுக்கு தெரியவில்லை. இப்படி ஒருத்தரை கார்னர் செய்து பைத்தியக்கார பட்டம் கட்ட ரெடி ஆகும் இந்த தாய் கிழவிகளை தட்டிக் கேட்காமல் பிக் பாஸ் ஒத்து ஊதுவது போல் தெரிகிறது.

Also Read:அவ பின்னாடி நாய் மாதிரி சுத்திட்டு இருக்கான்.. பிரதீப்பை விட கேவலமா பண்றது உங்க கண்ணுக்கு தெரிலயா பிக்பாஸ்

Trending News