வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

அட இந்த வாரமும் டபுள் எவிக்சனா!. டேஞ்சர் சோனில் இருக்கும் 2 பேர், உடைய போகும் மாயா கூட்டணி

BB7 Tamil Eviction: பிக் பாஸ் பார்வையாளர்கள இந்த வாரம் முழுக்க கமலஹாசன் எபிசோடுகளை தான் அதிகமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த வாரம் நடந்த அத்தனை அட்டூழியங்களுக்கும் கமல் நீதி சொல்லியே ஆக வேண்டும் என்பதுதான் ஆடியன்ஸ்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த வாரம் யார் வெளியே போகப் போகிறார் என்று லிஸ்ட்டும் வெளியாகிவிட்டது.

ஜோவிகா, பூர்ணிமா, மாயா இவர்களின் ஆட்டம் தான் இவ்வளவு நாள் அதிகமாக இருந்தது. தற்போது அக்ஷயாவும் இவர்களுடன் இணைந்து ஒத்து ஊதிக் கொண்டிருக்கிறார். வினுஷா விவகாரத்தில் சிக்கியதில் இருந்து நிக்சன் மற்றும் ஐஷு, ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் விசித்ராவிடம் சரணடைந்து விட்டார்கள். இதனால் தான் இப்போது மாயா, ஐஷு மற்றும் நிக்சனை பிரிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்.

தற்போது மாயா கூட்டணியை பிரிக்கும் பெரிய முயற்சியாக இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படி பார்க்கும் பொழுது, இந்த வாரம் ஓட்டிங் லிஸ்டில் குறைவான ஓட்டுகளை பெற்று ஐஷு மற்றும் பூர்ணிமா இருக்கிறார்கள். அப்படி என்றால் இவர்கள் இருவரும் வெளியேற வேண்டி வரும்.

Also Read:நாளுக்கு நாள் அதிகரிக்கும் அட்டூழியம்.. ஒரே பாத்ரூமுக்குள் மாயா, ஐஷு செய்த வேலை

ஒருவர் தான் வெளியேறுவார்கள் என்றால் அது கண்டிப்பாக பூர்ணிமா தான். பூர்ணிமா வெளியேறி விட்டால் மாயாவுக்கு உள்ளே எந்த சப்போர்ட்டும் இருக்காது. ஐஷு மற்றும் நிக்சன் தங்களுடைய விளையாட்டை விளையாட ரெடியாகி கொண்டிருக்கிறார்கள். அக்ஷயா, மாயா உடன் இருந்து அவ்வளவு திறமையாக சதித்திட்டம் போடுபவர் கிடையாது. ஜோவிகாவை மட்டும் தான் முழுக்க நம்பி மாயா இருக்க வேண்டியது வரும்.

பூர்ணிமா கோர்ட் டாஸ்கில் தொடர் தோல்வியை சந்தித்த பொழுது காண்டாகி நான் வீட்டை விட்டு வெளியேறுகிறேன் என்று அழுது புலம்பினார். அது மட்டும் இல்லாமல் பிக் பாஸிடம் என் இஷ்டத்திற்கு என்னை விளையாட விடுங்கள் இல்லை என்றால் வீட்டை விட்டு அனுப்பி விடுங்கள் என்றும் பேசி இருந்தார். இந்த வாரம் அந்த கோரிக்கை அவருக்கு நிறைவேற்றப்பட இருக்கிறது போல.

பூர்ணிமா வெளியேறுவது பிக் பாஸ் பார்வையாளர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கிறது. இருந்தாலும் மாயாவை காப்பாற்றியது போல் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி பூர்ணிமாவை காப்பாற்றி விடுவார்களோ என்ற பயமும் இருக்கிறது . அப்படி இந்த வாரம் பூர்ணிமா வெளியே போகவில்லை என்றால் ஏஜென்ட் டீமின் ஆட்டம் ஓவராக இருக்கும். அப்படி அவர் வெளியேறிவிட்டால் மாயா பயத்தில் அடங்கி விடுவார்.

Also Read: பிக்பாஸ் வரலாற்றையே மாற்றிய அர்ச்சனா.. அள்ள அள்ள குறையாத ஓட்டு, மரண பீதியில் மாயா அண்ட் கோ

Trending News