செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பிரதீப்பை ஆட்டம் காண வைக்கும் 2 வைல்டு கார்டு போட்டியாளர்கள்.. சூடு பிடிக்கும் பிக் பாஸ் ஆட்டம்

BB 7 Tamil Pradeep Antony: விஜய் டிவியின் பிரம்மாண்ட நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 7 எதிர்பார்த்ததை விட அமோகமாக போய்க் கொண்டிருக்கிறது. இந்த சீசன் தொடங்கிய முதல் வாரத்திலேயே பார்வையாளர்கள் அத்தனை பேரும் பிரதீப் ஆண்டனிக்கு சப்போர்ட் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். அதற்கு முக்கியமான காரணம் அவர் வளர்ந்து வந்த குடும்ப சூழ்நிலை தான்.

பிரதீப் மீது பார்வையாளர்களுக்கு சிம்பத்தி ஏற்பட்டது தான் அவருக்கு கிடைத்த ரெஸ்பான்ஸுக்கு முதல் முக்கிய காரணம். அதன் பின்னர் அவர் போட்டியை நன்றாக கணித்து விளையாடுகிறார், பிரதீப் தான் டைட்டில் வின்னர் என்று சொல்லும் அளவுக்கு பிக் பாஸ் சீசன் 7 இருந்தது. இப்படித்தான் மூன்றாவது சீசனில் கடைசி வரைக்கும் தர்ஷன் தான் டைட்டில் வின்னர் என்று நம்ப வைக்கப்பட்டு, அவர் வெளியேறிய சம்பவம் நடந்தது.

அதே போன்ற ஒரு சூழ்நிலை தான் இப்போது பிரதீப்புக்கு அமைந்திருக்கிறது. தன்னுடன் விளையாடிக் கொண்டிருந்த போட்டியாளர்களை சரியாக கணித்து, அவர்களை கோபமாக்கி உண்மையான கேரக்டரை வெளியில் வர வைத்தார். இதனால்தான் அவரை ஆரம்பித்தில் மக்களுக்கு ரொம்ப பிடித்தது. ஆனால் தற்போது அவரால் வைல்ட் கார்டு போட்டியாளர்களை சரியாக கணிக்க முடியவில்லை.

Also Read:நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் 9 பேரில் இந்த வாரம் வெளியேறும் சூனியக் கிழவி.. வைரலாகும் ஓட்டிங் லிஸ்ட்

சின்னத்திரை நடிகர் தினேஷ் தனக்கு போட்டியாளராக அமைவார் என பிரதீப்புக்கு நன்றாக தெரிந்துவிட்டது. பிக் பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சம்பவங்களும் இப்படித்தான் போய்க்கொண்டு இருக்கிறது. இந்த வாரத்திற்கான நாமினேஷனில் பிரதீப் இல்லை. வைல்ட் கார்டு போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில், ஓட்டிங்கில் அர்ச்சனா மற்றும் தினேஷ் அடுத்தடுத்த இடத்தில் இருக்கிறார்கள்.

அர்ச்சனா ஓட்டிங்கில் முதலிடத்தில் இருப்பது அவர் மீது இருக்கும் சிம்பதி என சொல்லப்படுகிறது. மேலும் பிரதீப் நாமினேஷனில் இல்லாததால் தான் இவர்கள் இருவரும் முதலிடத்தில் இருக்கிறார்கள் எனவும் பிரதீப்பின் ஆதரவாளர்கள் சொல்லி வருகிறார்கள். எப்படியும் இந்த வாரம் பிரதீப் நாமினேட் செய்யப்படுவார். மக்களிடையே அவரின் செல்வாக்கு அப்படியே இருக்கிறதா என அடுத்த வாரம் தான் தெரியப்போகிறது.

இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரைக்கும் பிரதீப் ரொம்பவும் டவுன் ஆகி இருக்கிறார். கூல் சுரேஷை அவர் தகாத வார்த்தைகளால் பேசியது ஆடியன்ஸ்களிடையே பெருங்கோபத்தை உண்டாக்கி இருக்கிறது. அதே நேரத்தில் தினேஷ் வீட்டிற்குள் என்ட்ரி ஆனதிலிருந்தே நாளுக்கு நாள் ஸ்கோர் செய்து கொண்டு வருகிறார். இவர்கள் இருவருக்கும் பெரிய போட்டி உருவாகப் போகிறது என்பதில் சந்தேகம் இல்லை.

Also Read:அம்மா சென்டிமென்ட் எல்லாம் உங்களுக்கு மட்டும் தானா.. மோசமான ஸ்ட்ராடெஜியை பயன்படுத்தும் பிரதீப்

Trending News