வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

என்ன கேப்டனா, வேல செய்ய விடமாட்றாங்க, கதறும் மாயா.. நாரதர் வேலையை பார்த்த பிக்பாஸ்

BB7 Promo Today: பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்போதுமே சுவாரசியம் இல்லாத போது தான் நிகழ்ச்சி தரப்பினர் நாரதர் வேலையை தொடங்குவார்கள். ஆனால் இந்த வாரம் கண்டன்டுக்கு குறைவில்லை என்பது போல் அடுத்தடுத்து ஓயாத சண்டை வந்து கொண்டு இருக்கிறது. அப்படி இருந்தும், நீங்க என்ன உங்க இஷ்டத்துக்கு கண்டென்ட் கொடுக்கிறது, நான் வைக்கிறேன் பாரு ஆப்பு என்ன பிக் பாஸ் தன்னுடைய வேலையை பார்த்து விட்டார்.

வீட்டை சுத்தி 100 கேமரா இருந்தாலும், ரகசியம் பேசுகிறேன் என்ற பெயரில் தன்னுடைய அதிபுத்திசாலித்தனத்தை போட்டியாளர்கள் காட்டி இருந்தார்கள். ஆனால் அவர்களின் முகங்களில் அசடு வழிய வைப்பது போல, அவர்கள் பேசிய சர்ச்சையான கமெண்ட்களை திரை போட்டு காட்டி, பதில் சொல்லுங்கள் என கொளுத்தி போட்டு விட்டார் பிக் பாஸ்.

மாயா, பூர்ணிமா, ஜோவிகா, ஐஷு போன்றவர்கள் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் அலட்டிக் கொண்டார்கள். வினுஷா பற்றி நிக்சன் பேசியது திரையில் வந்ததும் நிக்சனின் முகத்தில் ஈ ஆடவில்லை. கொளுத்தி போட்டது பத்தாது என்று, எதற்கு தனித்தனியாக சண்டை போட்டுக் கொள்கிறீர்கள் கும்பலாக சண்டை போடுங்கள் என்று கோர்ட் ரூம் கொடுத்திருக்கிறார் பிக் பாஸ்.

Also Read:மாட்டிக்கிட்டதும் ப்ளேட்டை மாத்திய நிக்சன்.. ஆண்டவரிடம் நியாயம் கேட்கும் கண்ணம்மா

போட்டியாளர்கள் தனித்தனியாக கன்பசன் ரூமுக்கு சென்று, யார் மேல் குற்றம் சாட்ட வழக்கு தொடர வேண்டுமோ அதை சொல்ல வேண்டும். எல்லோரும் சொல்லி முடித்த பிறகு கோர்ட் ரூமுக்கு சென்று விடுவார்கள். வழக்கு தொடுத்தவர்கள் அதற்கு எதிரானவர்கள் குற்றவாளி கூண்டில் இருக்க வேண்டும். அந்த வழக்கை வாதாடுவதற்கு போட்டியாளர்களில் இருந்து இருவர் வருவார்கள். அதே போல் ஒவ்வொரு வழக்கிற்கும் போட்டியாளர்களில் இருந்து ஒருவர் நீதிபதியாக தீர்ப்பு சொல்ல வேண்டும்.

இந்த டாஸ்க்கில் விசித்ரா, மாயா கேப்டன்சி ஒழுங்காக செய்யவில்லை என குற்றம் சுமத்தி இருக்கிறார். அதேபோல் மாயா, விசித்ரா தன்னை ஒழுங்காக வேலை செய்ய விடவில்லை என குற்றம் சாட்டியிருக்கிறார்கள். வழக்கம் போல ஸ்மால் பாஸ் வீட்டினர் மாயா, பூர்ணிமா மீது அடுக்கடுக்காக குற்றம் சாட்டியிருக்கிறார்கள். அதேபோல் பிக் பாஸ் வீட்டினர் அர்ச்சனாவையும், விசித்திராவையும் குற்றவாளிகளாக ஆக்கியிருக்கிறார்கள்.

இந்த வாரம் முழுக்க பிக் பாஸ் வீட்டில் அங்கங்கே நின்று சண்டை போட்டுக் கொண்டிருந்தவர்களை மொத்தமாக ஒன்று கூட்டி இருக்கிறார் பிக் பாஸ். ஏற்கனவே நேற்றைய டாஸ்க்கால் கொதித்துப் போய் இருப்பவர்கள், இன்று இதுதான் சாக்கு என மொத்தமாக புகுந்து விளையாட போகிறார்கள். இது தீபாவளி வாரம் என்பதால் தான் என்னவோ, பிக் பாஸ் வீட்டில் சரவெடி வெடித்துக் கொண்டிருக்கிறது.

Also Read:பிக்பாஸ் வீட்ல நைட்டும் தூங்க விடல, பகல்லயும் தூங்க விடல.. பெட்ல புரட்டி எடுக்கும் மன்மத குஞ்சு

Trending News