வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

பிக்பாஸ் 8-ல் சௌந்தர்யா சொன்ன 17 லட்சம் ஸ்கேம்.. பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்ட நிகழ்வு!

Bigg Boss 8: விஜய் டிவியின் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் எப்போதுமே பிக் பாஸுக்கு முதலிடம் உண்டு. கடந்த ஏழு சீசர்களை தொகுத்து வழங்கிய கமல் இந்த சீசனில் இருந்து விலகிக் கொள்ள அந்த இடத்தை விஜய் சேதுபதி பிடித்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும் போட்டியாளர்களாக இருக்கட்டும், விஜய் சேதுபதி மீதாக இருக்கட்டும் பல கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. எப்போதும் போல் இல்லாமல் இந்த சீசன் ஆண்கள் மற்றும் பெண்களுக்கிடையான போர்க்களமாக மாறி இருக்கிறது.

17 லட்சம் ஸ்கேம்

இதனாலேயோ என்னவோ நிகழ்ச்சியில் ஒரு வித சுவாரஸ்யம் குறைவாக இருப்பதாக இருக்கிறது. எப்படி இருந்தாலும் இந்த 100 நாள் நிகழ்ச்சியை பார்த்து தான் ஆக வேண்டும். பெரும்பாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்க்கும் டாஸ்க் போட்டியாளர்கள் தங்களுடைய சொந்த வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை பகிர்ந்து கொள்வது.

இந்த டாஸ்க் நடந்த பிறகு பெரும்பாலும் போட்டியாளர்கள் மீதான மக்களின் பார்வை மாறும். அப்படி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் சத்யா. அவருடைய காதல் மற்றும் காதலிக்கு நடந்த துயரத்தை பற்றி பேசியது மக்களிடையே பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் சௌந்தர்யா தான் 17 லட்சம் ஏமாந்தது பற்றி பேசி இருந்தார். ஏற்கனவே சௌந்தர்யா மீது கலவையான விமர்சனங்கள் இருப்பதால் அவர் மக்களிடம் சிம்பதி கிரியேட் பண்ண இப்படி ஒரு கதையை சொல்லி இருக்கிறார் என பேசப்பட்டது.

ஆனால் தற்போது உண்மையில் என்ன நடந்தது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. சௌந்தர்யா தன்னுடைய தோழிகளுடன் இந்த வருடம் மார்ச் மாதம் சிம்லாவுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அங்கு இருந்து திரும்பி வரும்போது ட்ரெயினில் தன்னுடைய போனை சார்ஜர் போட்டு இருக்கிறார்.

பொதுவாக ட்ரெயினில் சார்ஜர் பாயிண்ட் ஜன்னல் ஓரமாகத்தான் அமைந்திருக்கும். அப்படி சவுந்தர்யா சார்ஜர் போட்ட பிறகு திடீரென ஒருவர் அந்த போனை தூக்கிக் கொண்டு ஓடி இருக்கிறார். தன்னுடைய போன் தொலைந்து விட்டதாக டெல்லி போலீஸ் சௌந்தர்யா புகார் கொடுத்திருக்கிறார்.

அதன் பின்னர் டூப்ளிகேட் நம்பரும் வாங்கி இருக்கிறார். இதற்கு இடையில் சில மாதங்களுக்கு முன் சௌந்தர்யாவுக்கு வீடியோ கால் ஒன்று வந்திருக்கிறது. அதில் போலீஸ்காரர் போல் ஒருவர் பேசி இருக்கிறார். உங்களுடைய நம்பர் மூலம், சிம்லாவில் இருந்து சைனாவுக்கு சில முக்கிய தகவல்கள் சென்றிருக்கின்றன அது பற்றி விசாரிக்க தான் போன் பண்ணினேன் என சொல்லி இருக்கிறார்.

மேலும் சௌந்தர்யாவிடம் அவருடைய ஆதார் கார்டு நம்பரையும் கேட்டு வாங்கி இருக்கிறார். போலீஸ் தானே என்ற நம்பிக்கையில் சௌந்தர்யா ஆதார் கார்டு நம்பரை கொடுத்து இருக்கிறார். கொடுத்த சில நிமிடங்களில் சௌந்தர்யாவின் பேங்க் அக்கவுண்டில் இருந்தா 17 லட்சம் எடுக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து சௌந்தர்யா கொடுத்த போலீஸ் கம்ப்ளைன்ட் அறிக்கையும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Trending News