வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அசல் கோளாறு, நிக்சன் லிஸ்டில் சேர்ந்த பிக்பாஸ் 8 போட்டியாளர்.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு!

Bigg Boss 8: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு எட்டாவது சீசனில் காலடி எடுத்து வைத்திருக்கிறது. என்னதான் சீசன்கள் மாறினாலும் அதில் பங்கேற்கும் போட்டியாளர்களை கம்பேர் பண்ணி பார்ப்பது எப்போதுமே நடக்கும் விஷயம் தான்.

இவர் ஓவியா மாதிரி பண்ணுகிறார், இவருடைய கேரக்டர் ஜூலி மாதிரி இருக்கிறது, கவின் மாதிரி முயற்சி பண்ணுகிறார் என யார் யாரை இமிடெட் பண்ணுகிறார்கள் என்பதை கண்டுபிடிப்பது தான் நிகழ்ச்சி ஆரம்பித்ததும் இணையவாசிகளின் அடுத்த கட்ட வேலை.

எப்படி காதல், நட்பு, சண்டை போடுவது, கோள் மூட்டுவது என மாறாமல் இருக்கிறதோ அதேபோன்றுதான் சீசனுக்கு ஒரு கேரக்டர் பெண்கள் விஷயத்தில் முகம் சுளிக்கும் அளவுக்கு நடந்து கொள்ளும்.

முதல் சீசனில் சினேகன் பெண் போட்டியாளர்கள் ஏதாவது மனம் வருத்தப்படும் பொழுது அவர்களை கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்வது பெரிய அளவில் விமர்சனத்தை பெற்றது. இரண்டாவது சீசனில் மகத் சொல்லவே வேண்டாம். அவர் யாஷிகாவிடம் பழகிய விதம் நிகழ்ச்சி பார்ப்பவர்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு இருந்தது.

இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு!

அதிலும் வெளியே ஒரு கேர்ள் பிரண்டை வைத்துக் கொண்டு யாஷிகாவின் உணர்ச்சிகளோடு விளையாடியது பெரிய அளவில் நெகட்டிவ் விமர்சனத்தை பெற்றது. இதைத்தொடர்ந்து அடுத்த ரெண்டு சீசன்களில் இது போன்ற ஆட்கள் இல்லாமல் இருந்தார்கள்.

அதன் பின்னர் ஆறாவது சீசனில் வந்தவர் தான் அசல் கோளாறு. பெண்கள் எங்கிருக்கிறார்களோ அங்கேயே அமர்ந்து கொள்வது, அவர்களின் கைகளை பிடித்து பேசுவது, உரசிக்கொண்டு உட்காருவது என சில சில்மிஷ வேலைகளை செய்து வந்தார்.

அவரை தொடர்ந்து ஏழாவது சீசனில் உள்ளே வந்த நிக்சன் அப்படியே அசல் கோளாறு போலவே நடந்து கொள்கிறார் என பேசப்பட்டது. ஒரு கட்டத்தில் ஐஷுவை மூளை சலவை செய்து நாம் காதல் கண் கட்டு கொடுக்கலாம் என ஓகே சொல்ல வைத்தார்.

அதன் பின்னர் அவர் ஐஷுவிடம் நடந்து கொண்ட விதம் ரொம்ப ஓவராக இருந்தது. ஐஷு வெளியே சென்ற பிறகு பூரணிமாவிடம் நிக்சன் வழிய தொடங்கியது எல்லாம் அபத்தத்தின் உச்சம். இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கி மூன்றே நாட்களும் முடிந்திருக்கும் நிலையில் இந்த லிஸ்டில் இணைந்திருக்கிறார் ஜெப்ரி. ஒரு சில பெண்களிடம் இவர் கொஞ்சம் நெருக்கமாக பேச முயற்சிப்பதை போட்டு ட்ரெண்டாக்கி வருகிறார்கள் பிக் பாஸ் ரசிகர்கள்.

Trending News