சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

நடவடிக்கை எடுப்பதற்கு அவங்க யார்.? ஆஸ்திரேலிய நிர்வாகம் மீது கடும் கோபத்தில் பிசிசிஐ!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒன்றில் ஆஸ்திரேலியாவும் மற்றொன்றில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளது.

கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி வரும் இரு அணிகளுமே வெளியுலக தொடர்பு இல்லாமல் தனிமைப்படுத்தப்பட்டு போட்டிகளில் பங்கு பெறுகின்றன. இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் மீது ஆஸ்திரேலிய நிர்வாகம் புதிய புகார் ஒன்றை தெரிவித்துள்ளது.

இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆஸ்திரேலிய நாட்டில் பெரிய பிரச்சனைகள் ஏற்படவில்லை. ஆனால் புதிய வைரஸ் பரவலால் இப்பொழுது அங்கே சில பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆகையால் வீரர்கள் கடுமையான லாக்டவுன் விதிமுறைகளை பின்பற்றி வருகின்றனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில், இந்திய வீரர்கள் உணவு சாப்பிட்டதாகவும் அங்கே ஒரு ரசிகரிடம் நெருங்கி பழகியதாகவும் ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் இந்திய அணி வீரர்கள் மீது புகார் தெரிவித்துள்ளது.

இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா, பண்ட், சுப்மான் கில், பிரித்வி ஷா, சைனி ஆகிய ஐந்து பேர் இப்படி கொரோனா விதிகளை மீறி செயல்பட்டது பெரிய சர்ச்சையாகி உள்ளது. இவர்களால் ஆஸ்திரேலிய வீரர்களின் பாதுகாப்பிற்கு சிக்கல். இதனால் இவர்களை தனிமைப்படுத்த வேண்டும். இவர்களை தனியாக பயிற்சி மேற்கொள்ள வைக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Indian-Players-Cinemapettai.jpg
Indian-Players-Cinemapettai.jpg

இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் இப்படி தனிமைப்படுத்தியதால் பிசிசிஐ கடும் கோபத்தில் உள்ளது. அதன்படி இந்திய வீரர்கள் தவறு செய்து இருந்தால் அவர்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுப்போம். ஆனால் ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் எப்படி நடவடிக்கை எடுக்கலாம்.

Ganguly-Cinemapettai.jpg
Ganguly-Cinemapettai.jpg

இந்தியா அணி வீரர்கள் விதிகளை மீறவில்லை, அவர்கள் தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்சனையினால் ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் மீது கடும் கோபத்தில் உள்ளது பிசிசிஐ.

Trending News