இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரவிசாஸ்திரி விடுவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் கேப்டன் பதவியிலிருந்தும் விராத் கோலிக்கு பதிலாக ரோகித் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக அனைவரும் விரும்பிய இந்திய அணியின் சுவர் மற்றும் ஜென்டில்மேனாகிய ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். டிராவிட் ஒரு நேர்மையான மனிதர், ரொம்பவும் ஸ்ட்ரைட் பார்வேர்ட், நிறைய இளம் வீரர்களை இந்திய அணிக்காக உருவாக்கி தந்த பெருமை அவரைச் சேரும்.
இந்நிலையில் ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக மாறிய பின் அவர் வகித்து வந்த தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பொறுப்பை, யாருக்கு நியமிப்பது என்பதில் பெரிய குழப்பத்தில் இருந்தது பிசிசிஐ. தற்போது கங்குலி அதற்கு நிகரான ஒருவரை தேர்ந்தெடுத்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
சவுரவ் கங்குலி தேர்ந்தெடுத்த அந்த ஜாம்பவான், வி வி எஸ் லக்ஷ்மன். மேலும் லக்ஷ்மன் ராகுல் டிராவிட்டுடன் விளையாடியவர், இருவரும் நெருங்கிய நண்பர்கள். அதனால் இனிமேல் வருங்கால இந்திய அணிக்கு இது ஒரு நல்ல மாற்றமாக அமையும் என்று தெரிவித்துள்ளார் கங்குலி.