2022ஆம் ஆண்டு தொடக்கமே இந்திய அணிக்கு படுமோசமாக அமைந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற போட்டியில், டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்தது இந்திய அணி. அதுவும் ஒருநாள் தொடரை ஒயிட் வாஷ் முறையில் இழந்தது.
டெஸ்ட் போட்டிகளில், இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சரிவர ஆடாத காரணத்தினாலே இந்த தொடரில் இந்திய அணி, தென் அமெரிக்காவிடம் சரண் அடைந்தது. அதன்பின் இந்திய அணியில் பல சர்ச்சைகளும் ,பல குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது.
கேப்டன் விராட் கோலி, வெளிப்படையாக சீனியர் வீரர்கள் சரியாக ஆடவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். சீனியர் வீரர்களும் பதிலுக்கு கேப்டன் கோலி மீது பல குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர்.
சீனியர் வீரர்கள் ஆகிய புஜாரா மற்றும் ரஹானே இருவரும் சமீப காலமாக இந்திய அணிக்கு தங்களது பங்களிப்பை அளிக்கவில்லை. ஏதோ சிறுவர்கள் விளையாடும் விளையாட்டை போல் ஆடி வருகின்றனர். ஆகையால் அவர்களின் இடம் டெஸ்ட் தொடரில் கேள்விக்குறியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு கிரேட் அடிப்படையில் வழங்கப்பட்ட ஊதியத்தை குறைத்துள்ளது பிசிசிஐ. அது மட்டுமின்றி சிறப்பாக பந்துவீசி வந்த இளம் வீரர் முகமது சிராஜிற்கு அடுத்த கிரேட் முன்னேற்றம் கொடுத்து சம்பளத்தையும் அதிகரித்துள்ளது.
பிசிசிஐ இவ்வாறு செய்ததிலிருந்து இந்திய அணி ஆட்டம் கண்டுள்ளது. வீரர்கள் சரிவரவில்லை ஆடவில்லை என்றால் கிரேடு மட்டுமல்லாது சம்பளமும் குறைக்கப்படுவது ஆச்சரியமளிக்கிறது.