ஒவ்வொரு வருடமும் இந்திய கிரிக்கெட் வாரியம் வருடாந்தர கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்த பட்டியலை வெளியிட்டு வருகிறது. 2021ம் ஆண்டுக்கான ஒப்பந்த பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது.
ஏ+ ஏ, பி, சி என மூன்று பிரிவுகளாக அணியின் வீரர்களை பிரித்துள்ளனர். அதன்படி கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய மூன்று வீரர்கள் மட்டும் இந்திய அணியின் ஏ+ கிரேடில் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் சம்பளம் ஆண்டுக்கு 7 கோடி.
ஆர்.அஸ்வின், கே எல் ராகுல், முகமது சாமி, ஹர்திக் பாண்டியா, புஜாரா, தவான், ரஹானே, இஷாந்த் சர்மா, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா போன்றவர்கள் ஏ கிரேடில் இடம் பெற்றுள்ளனர், இவர்களின் ஓராண்டு சம்பளம் 5 கோடியாகும்.
பி கிரேடில் விர்திமன் சாகா, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், மயங்க் அகர்வால், ஷர்துல் தாக்கூர் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் ஓராண்டு சம்பளம் 3 கோடி ஆகும்.
குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, தீபக் சாஹர, சுப்மன் கில், ஹனுமா விஹாரி, அக்ஸர் பட்டேல், ஸ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சாஹல், முகமது சிராஜ் போன்ற வீரர்கள் , சி, கிரேடில் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஓராண்டுக்கு சம்பளமாக 1 கோடி வழங்கப்படும்.
ஒரு வீரர் குறைந்தது ஏழு ஒருநாள் போட்டிகள், பத்து 20 ஓவர் போட்டிகள், நான்கு டெஸ்ட் போட்டிகள் விளையாடி இருக்க வேண்டும். அவ்வாறு விளையாடி இருந்தால் இந்த பட்டியலில் இடம் பெறலாம் என பிசிசிஐ அறிவித்துள்ளது, அதன்படி தமிழக வீரர் நடராஜனுக்கு இடமில்லை.