20 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்த மாதம் 17ழாம் தேதி தொடங்கவிருக்கிறது. அந்த தொடர் முடிந்த பின்பு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஏற்கனவே பிசிசிஐக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவி காலம் முடிய போகிறது, அவரும் உலக கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணியை விட்டு வெளியேறி விடுவார். அவரைத் தொடர்ந்து பௌலிங் கோச் பரத் அருண் மற்றும் பீல்டிங் கோச் ஸ்ரீதர் என அனைவரும் வெளியேறி விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரவி சாஸ்திரிக்கு பின் இந்திய அணியின் பயிற்சியாளராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதில் பிசிசிஐக்கு பெரிய குழப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் இந்திய ஜாம்பவான் ராகுல் டிராவிட்டை அணுகி தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்குமாறு பிசிசிஐ கூறியிருக்கிறது. அதற்கு ராகுல் டிராவிட் இந்திய 19 வயதிற்குட்பட்ட அணியின் பயிற்சியாளராகவும் மற்றும் இந்திய ஏ அணிக்கு பயிற்சியாளராகவும் இருக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
ராகுல் டிராவிட் இப்படி சொல்வதிலிருந்து அவர் இந்திய சீனியர் அணியை நிராகரிக்கிறார் என தெரிகிறது. இதற்கு முன்னரும் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு பிசிசிஐ ராகுல் டிராவிட்டிடம் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தி இருக்கிறது. அதற்கும் ராகுல் டிராவிட் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இப்போது இந்திய அணிக்கு யாரை பயிற்சியாளராக நியமிப்பது என பிசிசிஐ குழம்பி வருகிறது. டிராவிட் சீனியர் அணி வேண்டாம் என்று தன்மையாக தெரிவித்துள்ளார்.