திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

ரஜினிக்கு கண்டனம் தெரிவித்த ஆணையம்.. தெளிவாக தெரியாமல் சூப்பர் ஸ்டார் பேசிய பேச்சு

ரசிகர்களிடம் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும் என நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை ஒன்று நேற்று நடந்த சட்டசபையில் தாக்கல் செய்திருக்கிறது. அதாவது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்து, இந்த ஆணையம் அறிவித்த அறிக்கையில் ரஜினிக்கு அறிவுரையை வழங்கியுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ரஜினி தனது வீட்டில் வைத்து பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார். இந்த சம்பவம் முழுக்க முழுக்க அரசு இயந்திரம் செயல்படாமல் போனதாலும், உளவுத்துறையின் தோல்வியாலும்தான் நடந்தது. மேலும் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகவும் ரஜினி அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

Also Read: இதுவரைக்கும் ரஜினி பேசாத ஒரே மொழி.. இப்ப வரைக்கும் முயற்சி பண்ணல

அதன்பிறகு அளித்த மற்றொரு பேட்டியில் ஊர்வலத்தில் சில சமூக விரோதிகள் நுழைந்த காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர் என்றும், ஆட்சியர் அலுவலகத்தை உடைத்து ஸ்ட்ரைக் அலுவலர் குடியிருப்பில் தீ வைத்தனர் என்றும் ரஜினி கூறியிருந்தார்.

ஆனால் ஆணையத்தின் விசாரணையின்போது ரஜினி, சமூக விரோதிகள் அப்படி செய்திருப்பார்கள் என்று நம்பி கருத்து கூறியதாக எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் தெரிவித்ததாக பின்னர் ரஜினிகாந்தே தெளிவான விளக்கமும் அளித்தார்.

Also Read: காலா, கோச்சடையான் படங்களால் வந்த வினை.. டாட்டா போட்டு தலைதெறிக்க ஓடும் ரஜினி

இப்படி மக்கள் மீதான தாக்குதல் பற்றிய கருத்துக்களை கூறும் போது ஆதாரம் இருப்பது அவசியம். அப்படி ஆதாரமே இல்லாமல் சில விஷயங்களை கூறினால் அதன் மோசமான பின்விளைவுகளுக்கு காரணமாகிவிடும். ஆகையால் சமுதாயத்தில் புகழ் பெற்றவர்களால் கூறப்படும் ஒரு கருத்து, பிரச்சினையை ஒருகாலமும் தீர்க்க பயன்படாது.

அதை அதிகரிக்க செய்து விடும். ஆகையால் சினிமா பிரபலங்கள் பிரச்சனையை பெரிதாக்காமல் அதை கட்டுப்படுத்த வேண்டும் என்ற பொறுப்புடன் செயல்பட வேண்டும் என அந்த ஆணையம் சூப்பர்ஸ்டாருக்கு அறிவுரை வழங்கியிருக்கிறது.

Also Read: ரஜினிகாந்தின் மகளுக்கு நாற்காலி கொடுக்காத பிரபல இயக்குனர்.. கொதித்தெழுந்த ரஜினிகாந்த்.!

Trending News