வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பீஸ்ட் படத்தில் இணைந்த முக்கியமான 3 நடிகர்கள்.. எதிர்பார்ப்பை எகிற வைத்த லேட்டஸ்ட் அப்டேட்!

நடிகர் விஜய் தற்போது இளம் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதே இப்படம் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முன்னதாக இப்படத்தில் விஜய்க்கு மூன்று வில்லன்கள் என தகவல்கல் வெளியான நிலையில், மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ விஜய்க்கு வில்லனாக சமீபத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அடுத்த இரண்டு வில்லன்கள் யார் என்கிற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், அதிரடியாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அப்டேட் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது. இயக்குனர் செல்வராகவன் பீஸ்ட் படத்தில் இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இப்படத்தில் மூன்று வில்லன்கள் என கூறப்பட்ட நிலையில் தற்போது இருவர் யார் என அறிவித்து விட்டனர். அப்படி என்றால் மூன்றாவது வில்லன் நிச்சயம் பாலிவுட் நடிகராக தான் இருப்பார் என ரசிகர்கள் இப்போதே கெஸ் செய்து வருகின்றனர். அவர் யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தற்போது செல்வராகவன் மட்டுமல்லாமல் மேலும் மூன்று நடிகர்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர். அவர்கள் வேறு யாருமல்ல முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு, விடிவி கணேஷ் மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் லில்லிபுட் ஃபரூக்கி (Liliput Faruqui) ஆகியோர் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

beast-yogibabu
beast-yogibabu

Trending News