வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அந்தக் காட்சியில் லாஜிக்கே இல்லை.. நெல்சனை விமர்சித்த பீஸ்ட் பட நடிகர்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளானது. அதாவது படத்தில் சில காட்சிகள் கற்பனைக்கும் அப்பாற்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. குழந்தைகள் கூட நம்ப தயங்கும் விஷயங்களை பீஸ்ட் படத்தில் நெல்சன் திணித்துள்ளார் என கேலிகளும் கிண்டல்களும் இணையத்தில் வெளியானது.

மேலும், படம் வசூல் ரீதியாக நல்ல லாபத்தை பார்த்தாலும் விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தான் தந்தது. இந்நிலையில் பீஸ்ட் படத்தில் வில்லனாக நடித்த ஷைன் டாம் சாக்கோ அண்மையில் மலையாள யூடியூப் சேனலில் ஒன்றில் பேட்டி அளித்திருந்தார்.

பீஸ்ட் படத்தில் இவர் வணிக வளாகத்தை கைப்பற்றும் பயங்கர தீவிரவாதியாக நடித்திருந்தார். இந்நிலையில் அந்த பேட்டியில் பீஸ்ட் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை என குறிப்பிட்டிருந்தார். அந்தப் படம் குறித்து ட்ரோல்களை பார்த்தேன். அந்தப் படத்தில் ஒருவரை அடித்து தூக்கி வரும்போது, அவரின் எடைக்கு ஏற்றவாறு முகத்தில் ரியாக்ஷன் காட்ட வேண்டும்.

ஆனால் பீஸ்ட் படத்தில் என்னை அடித்து தூக்கி வரும் போது விஜய் முகத்தில் எந்த ஒரு ரியாக்ஷனும் காட்டி இருக்க மாட்டார். அதற்கு விஜய் சார் மீது குறை சொல்ல முடியாது. இதற்கு முழு பொறுப்பு பீஸ்ட் படக்குழு தான் என டாம் சாக்கோ பேட்டியளித்துள்ளார்.

மேலும் பீஸ்ட் படம் தமிழில் எனக்கு ஒரு நல்ல என்ட்ரி இல்லை. ஆனால் ஒரு பெரிய படத்தில் நடிக்கும்போது எனக்கு அடுத்தடுத்த பட வாய்ப்பு வரும் என தெரிவித்துள்ளார். பீஸ்ட் படத்தில் நடித்த நடிகரே இப்படத்தைப் பற்றி இவ்வாறு கிண்டலாக சொல்லி இருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் ஒரு பக்கம் ஒரு தனி மனிதரை விஜய் அசால்டாக தூக்குவார் என்பதை உணர்த்தும் விதமாக அந்த காட்சி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ரசிகர்கள் பெரிய அளவில் அதை கவனிக்காததால் அந்த காட்சியை பலரும் தவறாக புரிந்து கொண்டுள்ளனர் என சிலர் கூறிவருகின்றனர்.

Trending News