வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

அடுத்த கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கிய நெல்சன்.. பீஸ்ட் படத்தின் அனல் பறக்கும் அப்டேட்

ரசிகர்களால் தளபதி என செல்லமாக அழைக்கப்படும் நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதேபோல் இவரது படங்களுக்கும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு உள்ளது. சமீபகாலமாக இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றன. எனவே தற்போது இவரது நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படம் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.

இளம் இயக்குனரான நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் பீஸ்ட் படத்தில் தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து வருகிறார். சாதாரணமாகவே விஜய் படம் என்றாலே எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அதுவும் இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் இணைந்து உள்ளதால் தற்போது இப்படம் மீதான ஆர்வம் மிகவும் அதிகரித்துள்ளது.

இதுநாள் வரை தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்த இயக்குனர் செல்வராகவன் தற்போது சாணிக்காயிதம் என்ற படம் மூலமாக நடிகராக களம் இறங்குகிறார். இந்நிலையில் இவரது இரண்டாவது படமே விஜய் படமான பீஸ்ட் படம் அமைந்துள்ளது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீஸ்ட் படத்திற்கான படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக சென்னையில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஐந்து நாட்களுக்கு முன் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்நிலையில், இன்று முதல் நான்காம் கட்ட படப்பிடிப்பை சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் தொடங்கியுள்ளனர்.

beast-cinemapettai-01
beast-cinemapettai-01

நான்காம் கட்ட படப்பிடிப்பை விரைவில் முடித்துவிட்டு செப்டம்பர் மூன்றாம் வாரத்தில் டெல்லி செல்ல படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அங்கு 5 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறதாம். அதை முடித்துவிட்டு சென்னை திரும்பும் படக்குழுவினர் இறுதிக்கட்ட படப்பிடிப்பை தொடங்குவார்கள் என்றும், நவம்பர் மாதத்திற்குள் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Trending News