சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

அதிக விலைக்கு கேட்கப்பட்ட விஜய்யின் பீஸ்ட் படம்.. வேண்டாம் என திருப்பி அனுப்பிய சன் பிக்சர்ஸ்!

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நடிகர் என்றால் அது நடிகர் விஜய் தான். இவரது படங்கள் வசூலில் சாதனை படைத்து வருகின்றன. தமிழ் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் விஜய் படம் வசூல் சாதனை படைத்து வருகிறது. மேலும் விஜய் படம் என்றாலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

அந்த வகையில் தற்போது விஜய் நடித்து வரும் பீஸ்ட் படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா கெஹ்டே நடித்து வருகிறார்.

இந்நிலையில், இப்படத்தை பிரம்மாண்டமான முறையில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

அதைப்போல் தற்போது உருவாகிவரும் பீஸ்ட் படத்திற்கும் பயங்கர எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதுமட்டுமின்றி இப்படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமைக்காக தற்போதே போட்டி போட தொடங்கி உள்ளனர். பீஸ்ட் படத்தின் இந்தி டப்பிங் உரிமையை 50 கோடிக்கு ஒரு முன்னணி நிறுவனம் கேட்டுள்ளதாம்.

beast-cinemapettai
beast-cinemapettai

ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், இப்படத்தின் இந்தி டப்பிங் உரிமையை விற்க வேண்டாம் என முடிவு செய்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்போதைக்கு எந்த வியாபாரமும் இல்லை எனக் கூறி அனுப்பியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Trending News