வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

பீஸ்ட் படத்தில் இரண்டு கதாநாயகிகளை சமாளிக்கும் தளபதி.. இளம் நடிகை வெளியிட்ட வைரல் பதிவு.!

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் பீஸ்ட். விஜய்யின் 65வது படமான பீஸ்ட் படத்தை இளம் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இவர்கள் தவிர விடிவி கணேஷ், யோகி பாபு மற்றும் செல்வராகவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடைபெற்று வந்த நிலையில் நான்காம் கட்ட படப்பிடிப்பிற்காக பீஸ்ட் படக்குழுவினர் டெல்லி சென்றுள்ளனர். சமீபத்தில் கூட அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் ஒரு வாரம் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாம். இந்த படப்பிடிப்பில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் பிரபல மலையாள நடிகை அபர்ணா தாஸ் டெல்லியில் நடைபெற்று வரும் பீஸ்ட் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளாராம். இப்படத்தில் அபர்ணா தாஸ் இரண்டாவது கதாநாயகியாக மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். தற்போது பீஸ்ட் படக்குழுவினருடன் அபர்ணா தாஸ் இணைந்துள்ளார்.

டெல்லியில் நடைபெற உள்ள ஒரு வார படப்பிடிப்பு முடிந்த பின்னர் பீஸ்ட் படக்குழுவினர் ரஷ்யா செல்ல உள்ளார்களாம். மேலும் அங்கு ஒரு சில முக்கியமான ஆக்ஷன் மற்றும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்தின் மொத்த படப்பிடிப்பையும் நவம்பர் மாதத்திற்குள் முடித்துவிட்டு படத்தை வரும் பொங்கலுக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

beast-aparna-das
beast-aparna-das

விஜய் படம் என்றாலே அதற்கென தனி வரவேற்பு எப்போதும் இருக்கும். அதிலும் பீஸ்ட் படத்தில் இயக்குனர் செல்வராகவன் விஜய்யுடன் இணைந்துள்ளதாலும், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், யோகி பாபு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளதாலும் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

Trending News