வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

பீஸ்ட் வேகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் பீஸ்ட் .! கோகுலத்தில் 36 நாட்கள் மட்டுமே..

தளபதி விஜயின் 65-வது படமான பீஸ்ட் திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கிக் கொண்டிருக்கிறார். இதில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்தப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்த நாளன்று ட்விட்டரில் வெளியிடப்பட்டு தளபதி ரசிகர்களின் ஏகபோக வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ள இடங்களில் எடுக்கப்பட்டது. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது.

ஏனென்றால் இன்னும் 36 நாட்களில் பீஸ்ட் படத்திற்கான முழு படப்பிடிப்பும் நிறைவடையவுள்ளது. ஆகையால் படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் கோகுலம் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது.

குறிப்பாக இரவு காட்சிகள் படமாக்கப்படுகிறது. அத்துடன் விறுவிறுப்புடன் சென்றுகொண்டிருக்கும் பீஸ்ட் படத்தை அதிவேகத்தில் எடுத்து முடிக்க படக்குழு தீவிர முயற்சியுடன் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

எனவே தளபதி ரசிகர்களால் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கும் பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதி ஆகியவை இனி வரும் நாட்களில் வரிசையாக வெளிவரவுள்ளது.

மேலும் பூஜா உடன் தளபதி விஜய் செம ரொமான்டிக்காக நடிப்பது மட்டுமல்லாமல், பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் செம்ம மாஸ் காட்டியுள்ள நிலையில், பீஸ்ட் படம் முழுவதும் தளபதியின் அதிரடி காட்சிகளை திரையரங்கில் காண்பதற்கு ரசிகர்கள் துடிதுடித்துக் கொண்டிருக்கின்றனர்.

Trending News