திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பொசுக்குன்னு கிஸ் அடிச்சுட்டானே.. ஓவியா-ஆரவ் போல ஒரு மருத்துவ முத்தமா!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது இன்னும் நான்கே வாரத்தில் நிறைவடைய உள்ளது. ஆகையால் கடந்த வாரத்தின் முதலிருந்தே போட்டிகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

அத்துடன் பாவனி மற்றும் அமீர் இருவருக்குமிடையே கடந்த சில நாட்களாகவே காதல் ட்ராக் ஓடிக்கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக அமீர், பாவனியிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தி விட்டார். அதன் பிறகு நேற்றைய நிகழ்ச்சியில் இரவு நேரத்தில், பாவனி குழப்பமான மன நிலைமையில் அமீரிடம் தன்னுடைய பிரச்சனையை பகிர்ந்து கொண்டிருந்தா.ர்

அப்போது அமீர், பாவனியிடம் ஏதோ கேட்க வேண்டும் என்று அவருடைய காதின் அருகில் சென்று பாவனியின் கன்னத்தில் முத்தமிட்டார். இதை பார்த்த ரசிகர்கள் வாயடைத்துப்போய் விட்டனர்.

இதேபோன்று ஏற்கனவே கடந்த பிக் பாஸ் சீசனில் ஓவியா மற்றும் ஆரவ் இருவருக்கும் இடையே ஏற்பட்டது. அதன் பிறகு ஆரவ் அதை மருத்துவ முத்தம் என்று கூறி சமாளித்து விட்டார். ஆனால் அமீர் அவ்வாறு செய்யாமல் தொடக்கத்திலிருந்தே பாவனிக்கு ரூட்டு போட்டுக் கொண்டிருக்கிறார்.

amir-pavani-cinemapettai
amir-pavani-cinemapettai

இந்த முத்த காட்சிகள் ஒளிபரப்பான பிறகும் கமல் இது குறித்து எதுவும் பேசவில்லை. ஆனால் நேற்றைய நிகழ்ச்சியின் ஹைலைட் பாவனி-அமீர் முத்தக்காட்சி தான்.

அதுமட்டுமின்றி இந்தக் காட்சியை பார்த்த பாவனி ஆர்மி ‘பொசுக்குன்னு கிஸ் அடிச்சுட்டானே’ என பதறிப்போய் உள்ளனர். மேலும் இன்னும் சில நாட்களே இருப்பதால் அமீர்-பாவனி இடையே நடைபெறும் காதல் லீலை விரைவில் சூடு பிடிக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Trending News