புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஜீரோ ஆன ஹீரோக்கள்.. ஓவரா குலுக்குனா பீர் பொங்கதான் செய்யும்

இந்த சினிமா உலகத்தில் ஹீரோ ஹீரோயின்கள் ஆடிய ஆட்டம் எல்லாம் மெதுவாக குறைந்து கொண்டே வருகிறது. தியேட்டர்களில் ரசிகர்கள் ஆட்டத்தை போடுவதால் அதிகமான கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர் நடிகைகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். ஆனால் வாழ்க்கை ஒரு வட்டம் போல தற்பொழுது ரசிகர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.

இதில் பல தயாரிப்பாளர்கள் கஷ்டத்தில் வாழ்ந்தாலும் நடிகர் நடிகைகளின் சம்பளம் பாதி அளவு குறைவதால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஒரு படத்தின் பட்ஜெட்டை விட சம்பளம் அதிகமாக இருப்பதால் தயாரிப்பாளர்கள் வேதனையில் இருந்தனர். தற்பொழுது அவர்களின் நிலைமையை பார்த்து தயாரிப்பாளர்கள் குஷியாக இருக்கிறார்கள்.

தியேட்டரில் வெளியாகும் முதல் நாள் காட்சிகளில் ரசிகர்கள் ஆடும் ஆட்டத்தைப் பார்த்து பிரபல நடிகர்கள் சம்பளத்தை முடிவு செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த ஆட்டம் எல்லாம் இனி குளோஸ்.

இனி வரும் படங்கள் அனைத்தும் OTT பிளாட்பார்ம் தான் வரப் போகிறதாம். 3டியில் எடுக்கப்படும் படங்களும் மால்களில் இருக்கும் தியேட்டர்களில் மட்டுமே படங்கள் ரிலீஸ் செய்வார்கள். இந்த பிரபலமான மால்களில் சூடம் ஏற்றுவது, தேங்காய் உடைப்பது டான்ஸ் ஆடுவது இதெல்லாம் எதுவும் கிடையாது. அப்படி செய்தால் அங்கு இருக்கும் பாடிகார்டு அலேக்காக தூக்கி வெளியே அனுப்பி விடுவார்கள்.

இந்த நிலைமையில்தான் ஹீரோக்களின் சம்பளத்தை பாதி குறைக்குமாறு முடிவு செய்திருக்கிறார்களாம் தயாரிப்பாளர்கள். ஏனென்றால் தியேட்டர், டிவி, டிஜிட்டல் என மூன்று வகையான வருமானங்களை கணக்கு பார்த்து தான் சம்பளம் கொடுப்பார்கள். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் தியேட்டர் என்பதை மறந்துவிட வேண்டியதுதான்.

இனி டிவி, டிஜிட்டல் அதிலும் முதலில் ரிலீஸ் ஆகப் போவது டிஜிட்டல் என்பதால் அதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப் போகிறார்கள். டிஜிட்டலில் எவ்வளவு விலை கொடுத்து படத்தை வாங்குகிறார்களோ அதனை கணக்கிட்டு தான் இனி ஹீரோக்களின் சம்பளம்.

ott
ott

அதனால் 50 சதவீதம் அளவிற்கு சம்பளம் பாதியாகக் குறையுமாம். இஷ்டம்னா நடி கஷ்டம்னா போ என்ற அளவிற்கு தான் படம் எடுப்பவர்களும் வந்துள்ளனர். அதனால் தான் வெப் சீரிஸ் என்ற பெயரில் 4 இயக்குனர்கள் 6,7 நடிகர்கள் என பங்கு பிரித்து வேறு வழியில்லாமல் படத்தை எடுத்து வருகின்றனர். வாழ்க்கை ஒரு வட்டம் என்பது மீண்டும் நிரூபணமானது.

Trending News