2010ல் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான நடந்த அதிர்ச்சியான சம்பவம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. 2010 ஆகஸ்ட் மாதம் இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு தொடர் அது, இந்தியா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற அந்த தொடரில் இலங்கை அணி கோப்பையை வென்றது.
இந்திய அணியின் பயமறியாத வீரர் என்றால் அது விரேந்திர சேவாக் தான். வாசிம் அக்ரம், பிராட்லி, சோயப் அக்தர், கிளென் மெக்ராத் போன்ற வீரர்களை எளிதாக அடித்து துவம்சம் செய்வது தான் சேவாக் ஸ்டைல். 20 ரன்கள் அடித்தாலும் ஸ்ட்ரைக் ரேட் 150, 180 ஆக இருக்கும்.
விரேந்திர சேவாக் ஒருமுறை இலங்கை அணிக்கு எதிராக 99 ரன்களில் விளையாண்டு கொண்டிருக்கும் போது வெற்றிக்கு தேவைப்படும் ஒரு ரன்னை இலங்கை அணியின் வீரர் சுராஜ் ரண்டிவ் நோ பாலாக வீசினார். இருந்தாலும் அந்த பந்தை சிக்சருக்கு பறக்க விட்டார் விரேந்திர சேவாக். எனினும் முதலில் நோ பால் வீசியதால் ஒரு ரன் மட்டுமே இந்தியாவிற்கு வழங்கப்பட்டது. அதனால் சேவாக் 100 ரன்கள் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
அந்த போட்டியில் சுராஜ் ரண்டிவ் நோ பால் வீசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. 33 ஓவர்களில் 171 ரன்களை எடுத்து இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது. விரேந்திர சேவாக் அணியின் வெற்றி தான் முக்கியம் எனது செஞ்சுரி முக்கியமல்ல என்று பெருந்தன்மையாக பேசினார்.
99 ரன்களில் சேவாக் விளையாடிக் கொண்டிருக்கும் போது சுராஜ் ரண்டிவ்விடம் திலகரத்ன டில்சான் நோ பால் வீசும்படி அறிவுரை கூறினார். அதற்கு ஏற்ப அவரும் வீசினார், முடிவில் சேவாக் 100 அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
போட்டி முடிந்த பின் இரவு சுராஜ் ரண்டிவ் தனது அறைக்கு வந்து மன்னிப்பு கேட்டதாகவும் இதனை பெரிதுபடுத்த வேண்டாம் எனவும் அணி சார்பாக கேட்டுக்கொண்டார் என விரேந்திர சேவாக் கூறினார்.
எல்லா அணியினருடன் நட்பு பாராட்டும் விரேந்திர சேவாக் ஒரு ஜென்டில்மேன் என பெயரெடுத்தவர். இந்த சம்பவத்தை அவர் பத்து வருடத்திற்கு பின் நினைவு கூறியுள்ளார்.