வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

21 வருடங்களுக்கு முன்பே ராதிகாவுடன் ஷார்ட் பிலிமில் நடித்துள்ள விக்ரம்.. வைரலாகும் புகைப்படம்!

பல முன்னணி நடிகர்கள் சின்னத்திரையில் வந்தபின் வெள்ளித்திரையில் கால் பதிப்பது அன்றைய காலகட்டத்தில் வழக்கமான ஒன்றாக இருந்தது.

ஆனால் தற்போது தலைகீழாக மாறிவிட்டது, சன் டிவியில் சூப்பர் ஹிட்டான சிறகுகள் என்ற ஷார்ட் பிலிமில் விக்ரம் நடித்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மனோபாலா மற்றும் ராதிகா இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான இந்த ஷார்ட் பிலிம் ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதில் விக்ரமுக்கு ஜோடியாக ராதிகா நடித்திருப்பார். இவர்களுக்கு இரண்டு குழந்தை இருப்பது போன்ற கதை அமைக்கப்பட்டிருக்கும்.

இதைத்தவிர விக்ரம் கலாட்டா குடும்பம், சின்ன சின்ன ஆசைகள் போன்ற சீரியலிலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

vikram-1
vikram-1

இதற்கு பின் கோலிவுட்டில் படிப்படியாக தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை அமைத்துக் கொண்டார். தற்போது இந்திய அளவில் விக்ரமுக்கு ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர்.

vikram-radhika
vikram-radhika

Trending News