சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

கூலி ரிலீசுக்கு முன்பே கைதி 2.. நிற்காமல் ஓடும் லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் தற்போது கூலி படத்தை இயக்கி வருகிறார். படத்தின் ஷூட்டிங்கில் சூப்பர்ஸ்டாரும் பிசியாக இருக்கிறார். தற்போது ஜெய்ப்பூரில் ஷூட்டிங் நடந்துகொண்டு இருக்கிறது.

இதை தொடர்ந்து அடுத்ததாக விசாகப்பட்டினத்தில் ஷூட்டிங் நடக்க வாய்ப்புள்ளது. விசாகப்பட்டணத்தில் முடித்துவிட்டு, தொடர்ந்து ஹைதராபாதில் ஷூட்டிங் நடக்கும்.

அங்கேயும் முடித்துவிட்டு, துபாய் செல்லவுள்ளது படக்குழு. துபாயில் Long Schedule-ஆக தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதோடு, படத்தின் மிச்ச மீதி வேலைகளை முடித்துவிட்டு, போஸ்ட் production பணிகளை ஆரம்பித்து விடுவார்கள்.

கூலி படம் நிச்சயம் மே மாதம் தான் ரிலீசாகும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்த நிலையில், லோகியின் அடுத்த நகர்வு பற்றி முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

கூலி ரிலீசுக்கு முன்பே கைதி 2…

லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கார்த்தியை வைத்து கைதி 2 படத்தை தான் எடுக்கவிருக்கிறார். தற்போது அந்த படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்களை தேர்வு செய்து, கால் ஷீட் வாங்கி வருகிறார்கள்.

இந்த நிலையில், கூலி படத்தின் ரிலீசுக்கு முன்பே கைதி 2 படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர். மார்ச் மாத இறுதியில் கைதி 2 படத்துக்கான படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளனர்.

இது ரசிகர்களின் ஹைப்பை பயங்கரமாக ஏற்றியுள்ளது. லோகேஷ் கனகராஜ் 10 படத்தோடு retire ஆகிவிடுவேன் என்று கூறி இருந்தார்.

அதற்காக இவ்வளவு ஸ்பீடாக வேலை செய்கிறாரா என்பது தெரியவில்லை.. அதே நேரத்தில், இவரை 10 படத்தோடு Retire ஆக நிச்சயம் ரசிகர்கள் விடமாட்டார்கள். LCU முடிந்தாலும், புதிய யூனிவெர்ஸ் வேண்டும் என்று அடம்பிடிப்பார்கள்.

ஆகையால், தற்போது இருக்கும் சூழ்நிலையை பார்க்கும்போது, லோகியின் Retirement வாய்ப்பே இல்லை என்று தான் தோன்றுகிறது..

Trending News