செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அரசியலுக்கு வரவே இல்ல, அதுக்குள்ள ஆல் கடத்தலா.. ரசிகர் மன்றம் செய்த செயலால் தலைகுனிந்த விஜய்!

தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிப்பில் வாரிசு திரைப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. வரும் பொங்கலன்று வாரிசு படத்துடன், நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும் ஒன்றாக ரிலீசாக உள்ளதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இதனிடையே வாரிசு திரைப்படத்தின் போஸ்டர்களும், ரஞ்சிதமே என்ற பாடலும் வெளியாகி இணையத்தில் வைரலான நிலையில், அடுத்த கட்டமாக இன்னொரு பாடலை வெளியிடலாம் என படக்குழுவினர் யோசித்து வருகிறார்களாம். இதனிடையே அந்த பாடலில் யானை, குதிரை,மாடு, ஆடு உள்ளிட்ட விலங்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Also Read : விஜய்க்கு மரியாதை அவ்வளவுதான்.. வாரிசு ரிலீஸ் குறித்து வெளுத்து வாங்கிய பிரபலம்

இதனிடையே இந்த விலங்குகளை படப்பிடிப்பில் பயன்படுத்த விலங்கு பாதுகாப்பு அமைப்பாளர்களிடம் சரியான அனுமதி பெறவில்லை என்ற செய்து உலா வந்தது. இதனை அறிந்துகொள்ள செய்தியாளர்கள் வாரிசு படப்பிடிப்பில் நுழைந்து படக்குழுவினரிடம் கேள்வி கேட்டுள்ளனர்.

இந்த நிலையில் படப்பிடிப்பில் இருந்து அவர்களை துரத்தி விரட்டிய படக்குழுவினர், விஜய் ரசிகர் மன்றம் மற்றும் நிர்வாகிகளிடமும் கூறி உள்ளனர். அவர்கள் அந்த செய்தியாளரை காரில் கடத்தி சென்று அலப்பறை செய்துள்ளனர். மக்கள் இந்த விஷயங்களை பார்க்காமல் இருப்பார்களா என்ன கண்டிப்பாக பார்ப்பார்கள் என்று விஜய்க்கு தெரியும் அப்படி இருந்து எப்படி அனுமதிக்கிறார் நாளை எப்படி மக்கள் முகத்தில் முழிபார் என்று தெரியவில்லை.

Also Read : விஜய் அப்பாவை பிரிய இவர்தான் முக்கிய காரணம்.. கண்மூடித்தனமாக நம்பியதால் காத்திருக்கும் ஆப்பு

இதனை அறிந்து கொண்டும் நடிகர் விஜய் கண்டுக்காமல் இருந்துள்ளார் என்பது தான் இங்கு அதிர்ச்சியான ஒன்று. நடிகர் விஜய் அரசியலில் எண்ட்ரியாகி விஜய் மக்கள் கட்சி என்ற கட்சியை நடத்தி வரும் நிலையில், கட்சி வளர்ச்சி அடைவதற்கு முன்பாகவே விஜய் தனது அரசியல்வாதி முகத்தை தற்போது வெளிக்காட்ட ஆரம்பித்து விட்டார் என பலரும் அவரை காட்டமாக பேசி வருகின்றனர்.

இந்த தவறை இப்போது சரி செய்யாவிட்டால் விஜய் கனவு கண்டிப்பாக கேள்விக்குறியாகும். மீடியா செய்திகள் இல்லாமல் நடிகர் விஜய் மட்டுமல்ல யாராலும் வளர்ந்த்திருக்க முடியாது. புகழ் வரும்போது போற்றும் மீடியா அவ்வப்போது தூற்றும்போது ஏற்றுக்கொள்ள மனம் இல்லாமல் வன்முறையில் ஈடுபடுவது சற்றுக் கூட உகந்ததாக இல்லை என பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Also Read : 14 வருடம் கழித்து தயாரிப்பாளரிடம் மல்லு கட்டிய விஜய்.. கிள்ளி கேட்ட திரிஷாவுக்கு அள்ளிக் கொடுத்த தளபதி!

Trending News