ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

கைதுக்கு முன் கதறி அழுத மீரா மிதுன்..

சினிமா பிரபலங்களை அசிங்கப்படுத்தி பேசி பின் பிரபலமாவது வழக்கமாக கொண்டிருந்தார் மீரா மிதுன். விஜய் டிவியின் பிக் பாஸ் மூலம் பிரபலமாகி அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையான நடிகையாக மாறிவிட்டார்.

இந்த நிலையில் ஒரே சமூகத்தினரை தவறுதலாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் இவர் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்ய வேண்டுமென்று போலீசாரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து சைபர் கிரைம் போலீஸ் தேடுதல் பணியை தொடங்கினர்.

இவர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. கைது செய்வதற்கு முன்னதாக கதறி அழுத மீரா மிதுன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபலங்களை மட்டுமில்லாமல் தன்னுடன் சிறு வயது பையனை வைத்துக்கொண்டு கேவலமான வேலைகளையும் செய்து வந்துள்ளார். இதைத் தவிர அந்த வீடியோவில் கதறி அழும்போது என்னை போலீசார் கைது செய்தால் இந்த இடத்தில் கத்தியை வைத்து குத்தி கொள்வேன் என்பது போன்று அலப்பறை செய்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி தன்னை காப்பாற்ற வேண்டும் என்றும் தமிழ்நாடு போலீஸ் தன்னை துன்புறுத்துவதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் மீரா மிதுன்.

Trending News