வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

நடிப்பு இல்லைனாலும் பட வாய்ப்புக்கு மட்டும் குறைச்ச இல்ல.. வாரிசு நடிகை என்பதால் சூர்யாவுக்கு ஜோடியாகும் வாய்ப்பு

Actor Surya: தற்போது சூர்யா, சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடித்துக் கொண்டு வருகிறார். இப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் இணையப் போகிறார்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஒரு வாரிசு நடிகையை நடிக்க விடலாம் என்று பல வேலைகள் பின்னணியில் நடைபெற்று வருகிறது. ஆனால் அவர் நடித்த சில படங்களை பார்த்த வரைக்கும் பெருசாக மக்களிடமிருந்து எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. அத்துடன் நடிப்புக்கேற்ற முகபாவனையும் இல்லை. இப்படிப்பட்ட இந்த நடிகைக்கு நடிப்பை வரவில்லை, ஆனால் வாய்ப்புகள் மட்டும் வந்து கொண்டே இருக்கிறது.

Also read: அக்கட தேசத்து இயக்குனருடன் கைகோர்க்கும் சூர்யா.. தனுஷ், சிவகார்த்திகேயன் வரிசையில் சிக்கிடாதீங்க!

அதற்கு காரணம் இவருடைய அப்பா தான். அதாவது பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் மகளாக இருக்கும் அதிதி சங்கர் தற்போது ஹீரோயினாக நடித்து வருகிறார்.இவர் நடித்த விருமன் மற்றும் மாவீரன் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அதுவும் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை பெற்று வருகிறார்.

முதலில் இவர் நடிப்பதற்கு இவருடைய அப்பா வேண்டா வெறுப்பாக சம்மதத்தை கொடுத்திருக்கிறார். அதற்கு காரணம் அதிக செலவு செய்து டாக்டர் படிப்பை படிக்க வைத்தது தான். படிப்பை முடித்த கையுடன் சினிமாவில் நுழைந்து விட்டார் என்பதால் கொஞ்சம் மனக்கவலையிலேயே சுற்றி வந்தார். அதன் பின் இவருக்கு கூடிய விரைவில் திருமணத்தை செய்து விடலாம் என்று முடிவெடுத்தார்.

Also read: வளரும் நடிகர்களுக்கு சப்போர்ட்டாக நடித்த விஜயகாந்தின் 5 படங்கள்.. சூர்யா கேரியருக்கு பக்கபலமாக இருந்த அண்ணா

ஆனால் அதற்கும் முட்டுக்கட்டை போட்டுவிட்டு இந்த ஒரு வருடம் மட்டும் நடிப்பதற்கு சம்மதம் கொடுங்கள் என்று அதிதி சங்கர் கேட்டுக் கொண்டார். அதன்படியே தற்போது சங்கர் கொஞ்சம் அமைதியாக இருந்து வருகிறார். மேலும் அதிதி சங்கர் மற்றும் சூர்யாவுக்கு மேனேஜராக இருப்பவர் தங்கதுரை. இதனால் இவரை வைத்து எளிதில் நினைத்த காரியத்தை சாதிப்பதற்கு காய் நகர்த்தி வருகிறார்கள்.

ஒருவேளை சூர்யாக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்தால் அது ஒர்க் அவுட் ஆகுமா என்பது பல கேள்விகளை எழுப்புகிறது. ஏனென்றால் சுதா கொங்கரா மற்றும் சூர்யா கூட்டணி எப்பொழுதுமே வெற்றி கூட்டணியாக தான் மக்கள் பார்க்கப்பட்டு வருகிறார்கள். அப்படி இருக்கும்போது இதில் அதிதி சங்கர் நடிப்பு இருந்தால் எந்த மாதிரியான வெற்றியை கொடுக்கும் என்று பலரும் அவர்களுடைய கமெண்ட்களை தெரிவித்து வருகிறார்கள்.

Also read: அடுத்தடுத்து 4 பட தோல்வியால் லோகேஷ் இடம் சரணடைந்த மாஸ் ஹீரோ.. விட்டுக் கொடுத்த ரோலக்ஸ் சூர்யா

Trending News