சினிமாவை பொறுத்தவரை இரண்டரை மணி நேரம் மாங்கு மாங்கு என்று ஹீரோ சண்டை போட்டாலும் இடையில் வரும் சில கதாபாத்திரங்கள் மொத்த பெயரையும் வாங்கிவிடும். அப்படி சில கதாபாத்திரங்களைப் பற்றி பார்ப்போம்.
அசுரன் டிஜே: யூடியூபில் ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்து நடனமாடி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவர் டிஜே. இவருக்கு தமிழில் அறிமுக படமே அனைவரும் திரும்பிப் பார்க்கும் விதமாக வெற்றிமாறன் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அசுரன் படத்தில் டிஜே நடித்த வேல்முருகன் கதாபாத்திரம் அனைவருக்கும் ஃபேவரைட் ஆக அமைந்தது.
வடசென்னை அமீர்: வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் சர்ச்சையையும் கிளப்பிய திரைப்படத்தில் மிகவும் முக்கியமானது வடசென்னை. இந்த படத்தில் தனுஷின் கதாபாத்திரத்தை விட அவர் நடித்த ராஜன் கதாபாத்திரம் அனைவர் மனதிலும் நின்றது குறிப்பிடத்தக்கது.
இமைக்கா நொடிகள் விஜய் சேதுபதி: விஜய் சேதுபதி ஏகப்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் இமைக்கா நொடிகள் படம் அவருக்கு கொஞ்சம் ஸ்பெஷலாக அமைந்தது. சில நிமிடங்கள் மட்டுமே நடித்த அந்த கதாபாத்திரத்திற்கு படம் வெளியாகி நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்ததும் குறிப்பிட வேண்டிய ஒன்று.
ஜகமே தந்திரம் ஜோஜூ ஜார்ஜ்: கார்த்திக் சுப்புராஜ் மற்றும் தனுஷ் கூட்டணியில் நேரடியாக நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற திரைப்படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் ஒரே ஒரு ஆறுதல் என்றால் அது மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் நடித்த சிவதாஸ் கதாபாத்திரம் தான்.
பிகில் விஜய்: சமீபகாலமாக விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த பிகில் திரைப்படம் ரசிகர்களின் பேவரைட் படமாக அமைந்தது. அதிலும் சில நேரம் மட்டுமே வரும் ராயப்பன் கதாபாத்திரம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டது. கேங்ஸ்டர் கதாபாத்திரமாக இருந்த ராயப்பன் கேரக்டருக்கு தனியாக ஒரு படம் செய்யுமாறு அட்லீயிடம் விஜய் ரசிகர்கள் வற்புறுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதே போல் நிறைய படங்களில் அந்த படங்களில் நடித்த நடிகர்கள் நடிகைகளையும் தாண்டி ஒரு சில கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்து விடும். அப்படி லிஸ்டில் விட்டுப்போன கதாபாத்திரங்களை கமெண்டில் பதிவு செய்யலாம்.