புதன்கிழமை, ஜனவரி 22, 2025

பட வாய்ப்பை இப்படித்தான் பயன்படுத்தணும் என நிரூபித்த 6 நடிகர்கள்.. அடுத்த சிவகார்த்திகேயனாக வரும் கவின்

Sivakarthikeyan – Kavin: சினிமாவை பொறுத்த வரைக்கும் வாய்ப்புகள் கிடைப்பது என்பது ரொம்பவும் அரிதான விஷயம். அதில் ஒரு சில நடிகர்கள் கிடைத்த வாய்ப்பை எப்படி உபயோகப்படுத்துவது என்று தெரியாமல் மொத்தமாக சொதப்பிவிட்டு சினிமாவில் இருந்து காணாமல் போய்விடுவார்கள். ஆனால் இந்த ஆறு நடிகர்கள் தங்களுக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தி தமிழ் சினிமாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரங்களாகவே மாறி இருக்கிறார்கள்.

அருள்நிதி: நடிகர் அருள்நிதி தன்னுடைய முதல் படமான வம்சம் திரைப்படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிக்காட்டியவர். கிடைக்கும் வாய்ப்புகள் எல்லாம் பயன்படுத்திய அடுத்தடுத்த படங்கள் என நடிக்காமல், சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதால் சினிமா ரசிகர்களுக்கு இவருடைய படங்களின் மீது எப்போதுமே ஒரு பெரிய நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கையை எப்போதுமே இவருடைய நடிப்பும் உடைத்ததில்லை.

Also Read:டாப் 5 லிஸ்ட்ல இருக்கும் ஹீரோக்கள்.. மூன்றாவது இடத்தில் சிவகார்த்திகேயனா.? புதுசா உருட்டாதீங்க

கதிர்: மதயானை கூட்டம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான கதிர், பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர். ரசிகர்கள் இடையே நல்ல பரிச்சயமான முகம் இவருக்கு இருந்தாலும் தொடர்வாய்ப்புகளை பயன்படுத்தாமல், தனக்கான கதைகளை சரியாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

ஹரிஷ் கல்யாண்: ஆரம்ப காலங்களில் படம் கதைகள் மற்றும் நடிப்பில் கொஞ்சம் சொதப்பி கொண்டிருந்தவர் தான் நடிகர் ஹரிஷ் கல்யாண். அதன்பின்னர் வாய்ப்புகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இவருடைய நடிப்பில் பியார் பிரேமா காதல் மற்றும் தாராள பிரபு போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அசோக்செல்வன்: நடிகர் அசோக் செல்வனை எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாத அமைதியான நடிப்புக்கு சொந்தக்காரர் என்று கூட சொல்லலாம். எப்படிப்பட்ட கேரக்டர் கொடுத்தாலும் அதை தனக்கான ஸ்டைலில் நடிக்க கூடியவர். சமீபத்தில் இவர் நடித்த போர் தொழில் திரைப்படம் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றி படமாகி இருக்கிறது.

Also Read:3 வருட கேப், தளபதி இடத்தை பிடிக்க சிவகார்த்திகேயன் போட்ட பலே திட்டம்.. அதிரடியாக தொடங்கப்பட்ட SK21

மணிகண்டன்: நடிகர் மணிகண்டன் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் இருந்தாலும் நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் தான் இவரை ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியது. பன்முக திறமை கொண்ட மணிகண்டன் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த கலைஞன் என்று கூட சொல்லலாம். சமீபத்தில் இவர் நடித்த குட் நைட் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.

கவின்: சினிமாவில் எப்படியாவது ஒரு வெற்றி படமாவது கிடைத்து விடாதா என்று ஏங்கிய நடிகர் கவினுக்கு இப்போது தொட்டதெல்லாம் துலங்கும் காலம் என்று கூட சொல்லலாம். லிப்ட் திரைப்படத்தின் மூலம் தன்னை ஒரு வெற்றி நாயகனாக நிரூபித்த கவின் டாடா திரைப்படத்தின் மூலம் தன்னை ஒரு சிறந்த நடிகனாகவும் நிரூபித்து விட்டார் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

Also Read:சிவகார்த்திகேயன் ரஜினி மாதிரியெல்லாம் இல்ல, ரஜினியே தான்.. மிஷ்கின் பேச்சுக்கு ப்ளூ சட்டை பதில்

Trending News