புதன்கிழமை, ஜனவரி 8, 2025

ஹீரோவே வில்லனாக மிரட்டிய 7 படங்கள்.. கண்டிப்பாக பார்க்க வேண்டிய மாஸ் படங்களின் லிஸ்ட்

தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தை வைத்து நடிகராக புகழ் பெற்று மறக்க முடியாத புலிகள் சிலர் உள்ளனர். அவர்கள் நடிப்பில் வெளிவந்து ஹிட்டான படங்களின் வரிசையில் தற்போது பார்க்கலாம்.

நெற்றிக்கண்:

விசுவின் கதைக்களத்தில், ரஜினிகாந்த் நடிப்பில், இளையராஜா இசையில் சூப்பர் ஸ்டார் வில்லனாக நடித்த படம் நெற்றிக்கண். இந்த படத்தில் தந்தை, மகனாக ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். காமெடி கதாபாத்திரத்தில் நடித்த கவுண்டமணி இந்த படத்திற்கு பின் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. இந்த படத்தில் வரும் சக்கரவர்த்தி என்ற கதாபாத்திரம் ரசிகர் மனதில் இன்று வரை மறக்க முடியாது.

சிகப்பு ரோஜாக்கள்:

பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் வெளிவந்த சிகப்பு ரோஜாக்கள். இந்த படம் ஒரு சைக்காலஜிக்கல் திரில்லர் கலந்த படம் கிட்டத்தட்ட 175 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனை படைத்தது. ஹிந்தியில் ரெட் ரோஸ் என்று ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அமைதிப்படை:

மணிவண்ணன் தயாரித்து, இயக்கி 1994-ல், 100 நாட்களையும் தாண்டி ஓடிய படம்  அமைதிப்படை, சத்யராஜ் வில்லனாக நடித்திருப்பார். இந்த படத்தில் மணிவண்ணன், ரஞ்சிதா, சுஜிதா, கஸ்தூரி போன்ற பிரபலங்கள் நடித்திருப்பார்கள். அரசியல் கதாபாத்திரமாக வாழ்ந்திருப்பர், மணிவண்ணன் நாகராஜசோழனை செதுக்கி இருப்பார் என்றே கூறலாம். அந்த அளவிற்கு தற்போது வரை சத்யராஜை தமிழ் சினிமா திரும்பிப்பார்க்க வைத்த படம். அம்மாவாசையாக இருந்த சத்யராஜ் நாகராஜசோழன் எம்.ஏ எம்.எல்.ஏ வாக பதவியில் அமர்வார். ரசிகர்களால் இன்றளவும் ரிப்பீட் மோடில் பார்க்கக்கூடிய படம் அமைதிப்படை.

வாலி:

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில், அஜித் நடிப்பில் வெளிவந்த படம் வாலி. இரட்டை வேடத்தில் அஜித் வில்லனாகவும், கதாநாயகனாகவும் நடித்து இருப்பார். தம்பியின் காதல் மனைவி என்று தெரிந்தே எப்படியாது அடைந்து விட வேண்டும், இதற்காக அஜித் இந்த படத்தில் ஆன்ட்டி ஹீரோ சப்ஜெக்டில் மிரட்டி இருப்பார் என்றே கூறலாம்.

மங்காத்தா:

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்குமார், அர்ஜூன், த்ரிஷா, லட்சுமிராய், அஞ்சலி போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்தது. அஜித்துக்கு ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த படம் என்று கூறலாம். வில்லனாக அஜித் பணத்திற்காக செய்யும் அட்டகாசம் ரசிகர்கள் பெரும் வரவேற்பை பெற்றது. யுவன் சங்கர் ராஜா இசை இந்த படத்திற்கு பொருத்தமாக அமைந்தது. தற்போது வரை இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்ப வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஜிகர்தண்டா:

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லக்ஷ்மி மேனன் நடிப்பில் வெளிவந்தது ஜிகர்தண்டா. இந்த படம் 10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 35 கோடி வரை வசூல் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பாபி சிம்ஹா வில்லனாக நடித்து இருப்பார். அசால்ட் சேது என்ற கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. கேங்க்ஸ்டர் படங்களில் மிக முக்கியமான படமாக ஜிகர்தண்டா பார்க்கப்பட்டது. பெஸ்ட் சப்போர்ட்டிங் ஆக்டர் நேஷனல் பிலிம் அவார்டு தூக்கினார் பாபி சிம்ஹா.

விடியும் வரை காத்திரு:

விடியும் வரை காத்திரு படத்தில் பாக்யராஜ் நெகட்டிவ் ரோலில் நடித்தது மற்ற ஹீரோக்களுக்கு ஒரு பாடமாகவே இருக்கும். ஒரு பிரபல ஹீரோ வில்லன் கலந்த கேரக்டரில் இப்படியும் நடிக்க முடியுமா என்று யோசிக்க வைத்தவர். வழக்கமாக அமைதியான கேரக்டரில் நடித்து வந்த பாக்யராஜ் விடியும் வரை பாத்திரத்தில் மிகவும் திரில்லராக அழகான நெகட்டிவ் ரோலில் நடித்து இருப்பார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதன் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு இப்பொழுது நடிகர்களும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

Trending News