கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு அணியின் கனவு ஐசிசி நடத்தும் உலகக்கோப்பையை செல்வதாகும். ஆனால் அது எல்லாருக்கும் கை கூடுவதில்லை. அப்படி தலை சிறந்த கேப்டனாக இருந்தாலும் ஒரு முறை கூட ஐசிசியினால் நடத்தப்படும் கோப்பைகளை வெல்ல முடியாமல் போன கேப்டன்களை இதில் காணலாம்.
மகிலா ஜெயவர்த்தனா: இலங்கை அணி ஒரு காலத்தில் மிகச் சிறந்த அணியாக வலம் வந்த காலத்தில் அதனை வழிநடத்தியவர் ஜெயவர்தனே. கிட்டத்தட்ட120 போட்டிகளுக்கு மேல் இலங்கை அணிக்கு கேப்டனாக இருந்த இவரால் ஒருமுறைகூட ஐசிசியின் கோப்பைகளை வெல்ல முடியவில்லை.
விராட் கோலி: நம்பர் ஒன் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி இதுவரை ஒரு ஐசிசியினால் நடத்தப்படும் கோப்பையை வென்றதில்லை. இவருக்கு முன் இந்திய அணியின் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனி மூன்றுவிதமான ஐசிசியினால் நடத்தப்படும் கோப்பைகளை இந்தியாவுக்காக பெற்றுத் தந்துள்ளார்.
கிரேம் ஸ்மித்: தென்னாபிரிக்கா அணிக்கு மிகச்சிறிய வயதில் கேப்டன் ஆனவர் ஸ்மித். இவர் கேப்டனாக இருந்தபோது பல சாதனைகளை செய்துள்ளது தென்னாபிரிக்க அணி. இவரும் தனது அணிக்காக ஒரு ஐசிசி கோப்பைகளை கூட வென்றதில்லை.
ஏபி டிவில்லியர்ஸ்: 360 டிகிரி பேட்ஸ்மேன் என அனைவராலும் அறியப்படும் டிவில்லியர்ஸ் குறைந்த அளவிலான போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். இவரும் ஐசிசி நடத்தும் போட்டிகளில் கேப்டனாக நின்று தென்னாப்பிரிக்காவுக்கு கோப்பையை வென்றதில்லை.
இன்சமாம்-உல்-ஹக்: 87 ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு தலைவராக வழிநடத்திய இன்சமாம் கிட்டத்தட்ட 58 சதவீத வெற்றிகளைப் தன் வசம் வைத்துள்ளார். இருந்தாலும் ஐசிசி கோப்பையை வென்றதில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.