சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

காலேஜா அப்படி என்றால் என்ன? கல்லூரி வாழ்க்கையை அனுபவிக்காமல் தொலைத்த 5 நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள்.

கிரிக்கெட் மட்டுமல்ல படிப்பிலும் நான் கில்லி என பல கிரிக்கெட் வீரர்கள் நிரூபித்து இருக்கின்றனர். அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட், லக்ஷ்மன் போன்ற தலைசிறந்த வீரர்கள் நன்கு படித்தவர்கள். ஆனால் சில வீரர்கள் தங்களது பள்ளிப் படிப்பு முடித்ததும் கிரிக்கெட் தான் வாழ்க்கை என்று, அதற்காக கல்லூரி படிப்பை தியாகம் செய்துள்ளனர். அப்படி கிரிக்கெட்டில் வெற்றி அடைவதற்காக தங்களது கல்லூரி படிப்பை தியாகம் செய்த 5 இந்திய வீரர்கள்.

யுவராஜ் சிங்: இந்திய அணி கண்ட ஒரு சிறந்த ஆல்ரவுண்டர். பில்டிங், பவுலிங் பேட்டிங் என அனைத்திலும் சோபித்த யுவராஜ்சிங் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் கிரிக்கெட்டிற்கு தன் வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டார். இந்திய கிரிக்கெட் அணிக்குள் வந்த பிறகு தான் தன்னுடைய கல்லூரி படிப்பை தொலைதூர கல்வி மூலம் முடித்தார்.

Yuvi-Cinemapettai.jpg
Yuvi-Cinemapettai.jpg

ஜாஹீர் கான்: 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை கைப்பற்ற மிகப் பெரிய காரணமாக இருந்தார். பள்ளிப் படிப்பில் சிறந்து விளங்கிய இவர் இன்ஜினியரிங் சீட் கிடைத்த பின்னர் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் பாதியில் தன் படிப்பை நிறுத்திவிட்டு கிரிக்கெட்டில் தான் நம் எதிர்காலம் இருக்கிறது என்று இந்திய அணிக்கு விளையாட வந்துவிட்டார்.

Zahir-Cinemapettai.jpg
Zahir-Cinemapettai.jpg

சச்சின் டெண்டுல்கர்: பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 16ஆம் வயதில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் விளையாட தொடங்கிவிட்டார். உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேனான இவர் 24 வருட காலமாக கிரிக்கெட்டுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியிலில் முதலிடத்தில் இருக்கும் சச்சின் 100 சென்சுரிகள் அடித்துள்ளார்.

Sachin-Cinemapettai-1.jpg
Sachin-Cinemapettai-1.jpg

விராட் கோஹ்லி: இன்று கிரிக்கெட் உலகில் நம்பர் ஒன் வீரராக இருக்கும் விராட் கோலி பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். டெல்லியில் பள்ளி படிப்பை முடித்த இவர் அதன்பின் கிரிக்கெட் விளையாட வந்துவிட்டார். கோஹ்லி, டி20, ஒரு நாள், டெஸ்ட் என மூன்று வகையான போட்டிகளிலும் 50 சராசரி வைத்திருக்கும் ஒரே கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Virat-Cinemapettai.jpg
Virat-Cinemapettai.jpg

ஷிகர் தவான்: தற்போது இந்திய அணியின் ஒபனராக கலக்கி வரும் ஷிகர் தவான் 2004ஆம் ஆண்டு ஐசிசி நடத்திய யு19 கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள்(505) அடித்தவர் பட்டியிலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். டெல்லியில் உள்ள செயின்ட் மார்க்ஸ் உயர் நிலைப் பள்ளியல் 12ஆம் வகுப்பு முடித்தவுடன் இந்திய கிரிக்கெட் அணிக்குள் வந்தார், அதன் பிறகு மறந்து கூட இவர் படிக்க செல்லவில்லை.

Dhawan-Cinemapettai.jpg
Dhawan-Cinemapettai.jpg

Trending News