பொதுவாக கிரிக்கெட் விளையாடுபவர்கள் அனைவருக்கும் கிரிக்கெட்டை தவிர மற்ற ஏதாவது ஒரு விஷயத்தில் ஆர்வம் இருக்கும். அந்தவகையில் பல கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் அல்லாத மற்ற விஷயங்களில் பல திறமைகளை கொண்டுள்ளனர். அப்படிப்பட்ட வீரர்களின் தனித்துவமான திறமையை இதில் காண்போம்.
அனில் கும்ப்ளே: இந்திய அணியில் சுழற்பந்து வீச்சில் தனக்கென்று நீங்காத இடம் பிடித்தவர் அனில் கும்ப்ளே. இந்தியா ஸ்பின் பவுலிங் என்றால் கும்பலின் பெயர் தான் அனைவருக்கும் நினைவில் வரும். அனில் கும்ப்ளே பந்து வீசுவது மட்டுமல்லாமல், ஒரு தலைசிறந்த வைல்டு லைப் போட்டோகிராபர் கூட.
கபில்தேவ்: 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்திய அணிக்காக வாங்கித்தந்தர் கேப்டன் கபில்தேவ். இவர் ஒரு தலைசிறந்த ஆல்ரவுண்டர். இவரை மாதிரி எங்கள் அணியிலும் ஒருவர் வேண்டும்
என்று அனைவரும் ஆசைப்படுவார்கள். இவர் கிரிக்கெட்டை தவிர கோல்ப் விளையாட்டிலும் ஒரு தலைசிறந்த வீரர்.
பிளின்ட் ஆப்: சர்ச்சைகளுக்கு பெயர் போன பிளின்டாப் ஒரு குத்துச்சண்டை வீரர். இவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் குத்துச்சண்டையில் கவனம் செலுத்தி அதில் ஒரு சிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார்.
அஜிங்கிய ரஹானே: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனான ரகானே, கராத்தே சண்டையில் பிளாக் பெல்ட் வாங்கியவர். ரஹானே மிகவும் அமைதியானவர், அவரைப் பார்த்தால் அவர் ஒரு என்றுகுத்துச்சண்டை தெரியாது.
மேத்யூ ஹைடன் : இவர் சமையல் கலை வல்லுநர். தனக்கென உரிதான அதிரடி ஆட்டத்தின் மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு பல வெற்றிகளை தேடிக் கொடுத்தவர். இவர் சமைப்பதில் மிகவும் கில்லாடி. ஓய்வு நேரங்களில் தனது பெரிய குடும்பத்திற்காக இவர்தான் சமைத்துக் கொடுப்பாராம்.