வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

போலீஸ் படம்னா இதுதான்னு காட்டிய 5 நடிகர்கள்.. ஜெயலலிதாவிடம் காட்ட பயந்த இயக்குனர்

Best Police story movies in tamil cinema: சினிமாவில் காவல் அதிகாரியாக நடிக்கும் நடிகர்களின் படங்கள் ஆக்சனுக்கு குறைவில்லாமல் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் வெளிவருவது உண்டு. சிலர் திரைக்கதைக்கு ஏற்ப துணிச்சலாக தன் கருத்துக்களை முன்வைத்து படத்தை வெற்றி பெற செய்தனர் அப்படியான படங்களில் சில,

கேப்டன் பிரபாகரன்: விஜயகாந்த் அவர்கள் சத்ரியன், புலன் விசாரணைபோன்ற பல படங்களில் காவல் அதிகாரியாக நடித்திருந்தாலும் அவருக்கு ரொம்பவும் ஸ்பெஷல் என்றால் அது கேப்டன் பிரபாகரன் தான். விஜயகாந்தின் 100 வது படம் மற்றும் அவருக்கு கேப்டன் என்று பெயர் வாங்கி கொடுத்த பெருமை இந்த படத்தையே சாரும்.  துணிச்சலாகவும் நேர்மையாகவும் இப்படத்தின் மூலம் அரசின் செயல்களை அம்பலப்படுத்தவும் தட்டிக் கேட்கவும் செய்தார் விஜயகாந்த்.

சாமி: காவல் அதிகாரியாக ஆக்சன் மட்டுமே காட்டி வில்லன்களை அதிர வைத்த நிலையில் இதற்கு ஒரு மாற்று ஏற்பாடாக வில்லனை தந்திரங்கள் மூலமாக ஓடி ஒளிய வைத்தார் இந்த சாமி. ஹரியின்  இயக்கத்தில் விக்ரம், திரிஷா நடித்து 2003ல் வெளிவந்தது சாமி. இந்தக் கதைக்கு பொருத்தமான காவல் அதிகாரியாக விக்ரம் நடித்திருந்தார்.

Also read: அரசியலைத் தாண்டி, சினிமாக்காரர்களுக்கு விஜயகாந்த் செய்த உதவி.. கேப்டன் இல்லனா, இப்ப இந்த ஹீரோக்களே இல்ல

வால்டர் வெற்றிவேல்: பி வாசு இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் 1993 வெளிவந்த வால்டர் வெற்றிவேல் படத்தின் ஒரு காட்சியில் மந்திரியை காவல் அதிகாரி செருப்பால் அடிப்பதாக உள்ளது. இதனால் இப்படத்தை ஜெயலலிதாவிடம் போட்டு காண்பிக்க தயங்கிய வாசுவை, படத்தை பார்த்துவிட்டு ஜெயலலிதா அவர்கள், ஒரு அரசியல்வாதியும் காவல் அதிகாரியும் எப்படி இருக்க வேண்டும் என்பதை தெளிவாக காட்டி உள்ளீர்கள் என்று பாராட்டினாராம்.

காக்க காக்க: சூர்யாவின் கேரியரிலும் ரசிகர்களாலும் மறக்க முடியாத படமாக காக்க காக்க அமைந்தது. காதல் கலந்த காவலை ஆக்ஷன் உடன் வெளிப்படுத்தினார் இயக்குனர் கௌதம். என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆன அன்பு செல்வன் காவல்துறையின் செயல்பாடுகளால் தன் அன்பான உறவுகளை இழக்கும் கதையை விறுவிறுப்பாக  நகர்த்தி இருந்தது இந்த காக்க காக்க.

என்னை அறிந்தால்: கௌதம் இயக்கிய மற்றொரு படமான என்னை அறிந்தால் அஜித்திற்கும் வில்லன் அருண் விஜய்க்கும் திருப்புமுனையாக அமைந்தது. “ஒரு போதும் வந்த மோத மாட்டாய் என்னை அறிந்தால்! மோதிப் பார்க்க ஆசைப்பட்டால்  அய்யோ தொலைந்தாய்!” என்று  வில்லன்களை காவல்துறை அதிகாரியாக பொளந்து கட்டினார் அஜித், கூடவே கண்ணியமிக்க காதல் வேறு! படமோ ஹிட்டோ ஹிட்.

Also read: 2024 இல் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 6 படங்கள்.. இந்தியன் 2வுக்கு டப் கொடுக்க வரும் கல்கி

Trending News