வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

2021-இல் வெளியான 6 சிறந்த ரீமேக் படங்கள்.. இதில் உங்க ஃபேவரைட் எது?

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ரீமேக் படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரம்மாண்ட வெற்றி பெற்ற பிறமொழிகளின் படங்களை தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெற்றி பெற்ற படங்களை தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெளியான படங்களைப் பார்க்கலாம்.

நெற்றிக்கண்: மிலிண்ட் ராவ் இயக்கத்தில், நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் நெற்றிக்கண். இப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து இருந்தார். இப்படம் 2011இல் வெளியான பிளைன்ட் என்ற தென் கொரிய படத்தின் ரீமேக் ஆகும்.

ஓமன பெண்ணே: கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஓமன பெண்ணே. தெலுங்கில் விஜய் தேவரகொன்டா, ரிதுவர்மா நடிப்பில் வெளிவந்த பெல்லி சூப்புலு என்ற படத்தின் ரீமேக் தான் ஓமன பெண்ணே.

மாறா: திலீப்குமார் இயக்கத்தில் மாதவன், சிரத்தா சிறீநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் மாறா. மார்ட்டின் பிரகாட் எழுதிய மலையாள திரைப்படமான சார்லி என்ற படத்தை தமிழில் மாறா என ரீமேக் செய்யப்பட்டது.

கபடதாரி: பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, நாசர், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் கபடதாரி. இப்படத்தை ஜி தனஞ்செயன் தயாரித்திருந்தார். இப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியான கன்னடத் படமான காவலுதாரி என்ற படத்தின் ரீமேக் ஆகும்.

அன்பிற்கினியாள்: கோகுல் இயக்கத்தில் அருள் பாண்டியன், கீர்த்தி பாண்டியன், பிரவீன் ராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் அன்பிற்கினியாள். இப்படத்தை அருண்பாண்டியன் தயாரித்து இருந்தார். அன்பிற்கினியாள் படம் 2019ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஹெலன் படத்தின் ரீமேக் ஆகும்.

பிரெண்ட்ஷிப்: பிரெண்ட்ஷிப் படத்தை ஜான் பால்ராஜ், சாம் சூரியா ஆகியோர் எழுதி இயக்கியிருந்தனர். இப்படத்தில் ஹர்பஜன் சிங், அர்ஜுன், லாஸ்லியா மரியனேசன், சதீஸ் ஆகியோர் நடித்திருந்தனர். மலையாளத்தில் வெளியான குயின் படத்தின் ரீமேக் பிரெண்ட்ஷிப் ஆகும். பிரண்ட்ஷிப் படம் இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.

Trending News