ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

சக்காளத்தியுடன் கோபியை சேர்த்து வைத்த பாக்கியா.. ஈஸ்வரியின் கொட்டத்தை அடக்க வீட்டிற்கு வரும் ராதிகா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ஈஸ்வரி கோபியை கூட்டிட்டு கோயிலுக்கு போன நிலையில் எல்லா வேண்டுதலையும் முடித்துவிட்டு திரும்பி வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். வந்ததும் பாக்யாவை அனைவருக்கும் காபி போட்டு கொண்டு வா என்று சொல்கிறார். அப்படி பாக்கியா காபி போட்டு அனைவருக்கும் கொடுக்கும் பொழுது கோபிக்கும் கொடுக்கிறார்.

உடனே இதை பார்த்து இனியா மற்றும் ஈஸ்வரி சந்தோஷப்பட்டு கொள்கிறார்கள். அத்துடன் பாக்கியா காபியை கோபியிடம் கொடுத்த பின்பு உங்களிடம் தனியாக பேச வேண்டும் என்று சொல்லி கோபியை கூட்டிட்டு போகிறார். அதன் பின்பு கோபியிடம் உங்களோட டூர் நல்லபடியாக முடிந்ததா என்று கேட்கிறார். கோபியும் நல்லா இருந்துச்சு நல்லா ஜாலியா என்ஜாய் பண்ணினோம். அம்மா, இனியா மற்றும் செழியன் எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள் என்று சொல்கிறார்.

அதற்கு பாக்யா, ஆனால் ராதிகா சந்தோசமாகவே இல்லையே என்று சொல்கிறார். உடனே கோபி, ஏன் ராதிகாவுக்கு என்னாச்சு நான் கோவிலுக்கு போகும் பொழுது ராதிகாவிடம் மெசேஜ் பண்ணிட்டு தான் போனேன் என்று கோபி சொல்கிறார். அதற்கு பாக்கியா, நீங்க அனுப்புன மெசேஜ்க்கு அவங்க ஏதாவது பதில் அனுப்புனாங்களா என்று கேட்கிறார். ஆனால் கோபி, ராதிகா வேலையில் பிஸியாக இருந்திருப்பாள். அதனால் எனக்கு பதில் எதுவும் அனுப்பவில்லை என்று சொல்லி சமாளிக்கிறார்.

உடனே பாக்கியா ஆமாம், ராதிகா ரொம்பவே பிஸியாக தான் இருந்திருப்பார். ஏனென்றால் ஒரு வீட்டை தனியாக காலி பண்ணுகிறோம் என்றால் ரொம்பவே வேலை இருக்கத்தான் செய்யும் என்று சொல்லிய நிலையில் கோபி அதிர்ச்சியாகிறார். என்ன பாக்யா சொல்கிறாய் என்று கோபி கேட்கும் பொழுது, நீங்க பேசாமல் அம்மா பின்னாடி இங்கே வந்து இருந்துட்டீங்க.

ஆனா அதன்பிறகு ராதிகாவை பற்றி கொஞ்சம் யோசித்துப் பார்த்தீர்களா, மயு பிறந்த நாளுக்கு கூட நீங்க போகவில்லை. ஆனால் உங்க அம்மா கூப்பிட்டால் தூரமாக இருக்கும் கோவிலுக்கு கூட போயிட்டு வர முடிகிறது. இதை எப்படி அவங்க எடுத்துப்பாங்கன்னு கூட கொஞ்சம் யோசித்துப் பார்க்காமல் சுயநலமாக இருந்திருக்கீங்க. இப்பொழுது கூட நீங்கள் ராதிகாவை பார்த்து பேசவில்லை என்றால் ராதிகா இனி உங்கள் வாழ்க்கையில் கிடையவே கிடையாது என்று பாக்கியா, கோபி புத்தியில் உரைக்கும் படி சொல்கிறார்.

இதையெல்லாம் கேட்ட கோபி அதிர்ச்சியாகிய நிலையில் பாக்யா ரூமை விட்டு வெளியே போகிறார். போனதும் வெளியே காத்துக் கொண்டிருந்த ஈஸ்வரி, செழியன் மற்றும் இனியா என்ன பேசினீங்க என்று பாக்கியாவிடம் கேட்கிறார்கள். அதற்கு பாக்யா உங்க பிள்ளையிடமே கேட்டுக்கோங்க என்று சொல்லி விடுகிறார். பிறகு கோபி ரூமை விட்டு வெளியே வந்த பிறகு ஈஸ்வரிடம் நான் ராதிகாவை பார்த்துட்டு வருகிறேன் என்று சொல்கிறார்.

இதை கேட்டதும் அதிர்ச்சியான ஈஸ்வரி, அவளைப் பற்றி பேசுவதற்கு தான் என் பிள்ளையை தனியாக கூட்டிட்டு போனியா? நான் கூட என்னமோ நெனச்சு சந்தோஷப்பட்டு விட்டேன் என்று ஈஸ்வரி சொன்ன நிலையில் பாக்யா நீங்க என்ன வேணாலும் நெனச்சு சந்தோஷப்பட்டுக்கோங்க. ஆனால் இப்பொழுது ராதிகா இருக்கும் நிலைமைதான் உங்க பிள்ளைக்கு எடுத்துச் சொல்லி இருக்கிறேன் என்று சொல்லி அடுப்பாங்கரைக்கு போய்விட்டார்.

உடனே கோபியை போகவிடாமல் தடுப்பதற்காக ஈஸ்வரி என்னலாமோ டிராமா பண்ணினார். ஆனாலும் கோபி நான் பார்த்துட்டு உடனே வந்து விடுகிறேன் என்று ராதிகாவை தேடி வீட்டிற்கு போய்விட்டார். அதன் பிறகு எப்படியாவது ராதிகாவை சமாதானப்படுத்த வேண்டும் என்று கோபி சமரசம் பேசிய நிலையில் கொஞ்ச நாளைக்கு அம்மாவின் திருப்திக்காக நான் அங்கே இருக்கிறேன். நீயும் என்னுடன் வந்து இரு என்று ராதிகாவை கையோடு கூட்டிட்டு வரப் போகிறார்.

இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஈஸ்வரி நினைப்பில் மொத்தமாக மண்ணு விழப் போகிறது. அந்த வகையில் கோபி கூப்பிட்ட பிறகு ராதிகாவும் வந்து ஈஸ்வரியின் கொட்டத்தை அடக்கும் விதமாக சில அதிரடியான விஷயங்களை செய்ய வேண்டும். அப்பொழுது தான் ஈஸ்வரி ஆட்டத்திற்கு முடிவு கட்ட முடியும். அப்படி இல்லை என்றால் கோபி கூப்பிட்டாலும் வரமாட்டேன் என்று ராதிகா தனியாக போய்விட்டார் என்றால் இனி கோபியின் நிலைமை கேள்விக்குறிதான்.

Trending News